Advertisement

முகம் பளிச்சிடும் தோற்றம் பெற சில குறிப்புகள்

By: vaithegi Tue, 08 Nov 2022 8:49:15 PM

முகம் பளிச்சிடும் தோற்றம் பெற சில குறிப்புகள்

அழகு என்பது பெண்களை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி தற்போது ஆண்களும் தங்களது அழகை குறித்து கவலைப்பட தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் இன்றைய நவீன காலத்தில் கூடுதல் அழகை தாண்டி இயற்கையாகவே முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், அழுக்குகளை இரசாயண அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி சரி செய்ய முயல்கிறோம். ஆனால் அதுவே நம் சருமத்திற்கு கேடு விளைவிக்கிறது.

எண்ணெய்ப் பசை சருமம் உடையவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை ஏற்படும். அந்த பருக்களைக் கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புள்ளது. அதனால் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி. வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும். வீட்டிலேயே இருந்தாலும் தினமும் 5 முறை சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பருக்கள் வராமல் தடுக்க உதவும்.

காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் முகத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும். அதற்கு துணியில் பாலை நனைத்து முகத்தைத் துடைத்து நன்கு காய்ந்த பின், நீரில் நனைத்த சுத்தமான காட்டன் கொண்டு துடைக்கவேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

face,beauty ,முகம் ,அழகு

வெள்ளரிக்காய் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின்னர் ஈர துணியில் மெதுவாக துடைத்து எடுக்கவேண்டும். இப்படி செய்தால் முகத்திற்கு சோப்பு எதுவும் பயன்படுத்தாமலே உங்கள் முகத்தில் அழுக்குகள் எல்லாம் போய் பளிச்சிடும் தோற்றம் பெறலாம்.

ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி உள்ளது. அதனால் ஆரஞ்சு தோலுடன் சிறிது தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த பேஸ்ட்டை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். அந்த பேஸ்ட் ஐஸ் கட்டிகளாக ஆனதும். அதை கொண்டு தினமும் முகத்தில் தேய்த்து கழுவி வந்தால், முகம் பளிச்சென்று ஆகிவிடும்..

Tags :
|