Advertisement

உலர் சருமம் பிரச்னையை போக்க உங்களுக்கு சில யோசனைகள்

By: Nagaraj Fri, 23 Dec 2022 11:40:26 PM

உலர் சருமம் பிரச்னையை போக்க உங்களுக்கு சில யோசனைகள்

சென்னை: சருமம் உலர்ந்து போக முக்கிய காரணம், சுற்றுச்சூழல் மாற்றங்களாகும். இந்த மாற்றம் குளிர்கால உலர் சருமம் எனப்படுகிறது. சருமம் போதிய ஈரப்பதம் உற்பத்தி செய்யாததால் உண்டாகும் நிலைதான் உலர் சருமம்.

சருமம் மீது கொஞ்சம் ஆலிவ் ஆயில் தடவிக்கொண்டு அதை பின்னர் ஈரத் துணியால் துடைக்கவும். இதன் பிறகு சருமம் பொலிவு பெறுவதையும், ஜொலிப்பதையும் பார்க்கலாம்.

பாதி அவகாடோ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை முகத்தில் தடவிக்கொண்டு 20 நிமிடங்கள் உலர வைக்கவும். இது சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து மின்ன வைக்கும்.

beauty,dry skin,face,moisturizer,olive oil, ,அழகு, ஆலிவ் ஆயில், ஈரப்பதம், உலர் சருமம், முகம்

தூங்குவதற்கும் முன் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்வது. தேங்காய் எண்ணெய் அறை வெப்ப நிலையில் அடர்த்தியாகிவிடுவதால் இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீமாக அமையும்.

பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதாலும் புண்களை எதிர்க்கும் தன்மை இருப்பதாலும் முகத்தில் பால் தடவிக்கொள்வது, உங்கள் சருமம் பாதிப்படைவதில் இருந்து காக்கும்.

Tags :
|
|