Advertisement

இயற்கையான முறையில் முகம் பளிச்சுனு ஆக டிப்ஸ் இதோ

By: vaithegi Thu, 12 Oct 2023 10:50:25 AM

இயற்கையான முறையில் முகம் பளிச்சுனு ஆக டிப்ஸ் இதோ

வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வது இன்று இந்த பதிவில் காண்போம். எந்த ஒரு ஃபேஸ் பேக்கை போடும்போதும் முதலில் இந்த முறைகளை பயன்படுத்திவிட்டு போட்டால் நல்ல பலன் கிடைக்கும். முகத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு காய்ச்சாத பாலை ஒரு காட்டனில் நனைத்து மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

இரண்டாவதாக தேனுடன் வெள்ளை சக்கரை அல்லது அரிசி மாவு கலந்து முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும் போது முகத்திற்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். மூன்றாவதாக சுடு தண்ணீரில் துணியை நனைத்து முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது நம் முகத்தில் உள்ள சிறு துளைகள் அதாவது ஓபன் போர்ஸ் ஆக்டிவா ஆகும்.

natural style,shine,face,tips ,இயற்கையான முறை,பளிச்சு,முகம் ,டிப்ஸ்

இந்த முறைகளை பயன்படுத்திவிட்டு நம் முகத்திற்கு பேஸ் பேக் போடும்போது அதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும். இந்த முறைகளை நாம் வாரத்திற்கு 2 முறை மட்டுமே செய்ய வேண்டும்.

* பப்பாளி பழத்தை மசிந்து அதனுடன் தேன் கலந்து 20 நிமிடங்கள் போட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் போட்டு வந்தால் முகம் நன்கு பளபளப்பு ஆகிவிடும்.

* கடலை மாவுடன் தயிர் மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

* கற்றாழை ஜெல், பாசிப்பயிறு மாவு, தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் இளமையாக இருக்கும்.

* ஆரஞ்சு சாறு, கஸ்தூரிமஞ்சள் தூள், கோதுமை மாவு மற்றும் தயிர் கலந்து 20 நிமிடம் தடவி முகத்தை கழுவி வந்தால் முகம் ஜொலி ஜொலிக்கும்.

* வாழைப்பழத்தை மசிந்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் ஒரு 20 நிமிடம் தடவி முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கி முகம் சாஃப்ட்டாக இருக்கும்.

* வெள்ளரி சாற்றை இரவில் தடவி காலையில் முகம் கழுவி வர முகம் பளபளப்பு தந்து கருவளையம் நாளடைவில் மாறும்.

* முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவினால் இளமையான தோற்றம் கிடைக்கும்.

* முட்டைக்கோஸ் சாற்றை 15 நிமிடம் தடவி முகத்தை கழுவி வர முகச்சுருக்கம் எளிதில் வராமல் இருக்கும்.

பேஸ் பேக்கை போட்டு முடிந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மேலும் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சிறு துளைகள் மூடி சருமம் பாதுகாப்பாகவும் சாப்டாகவும் இருக்கும் . சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் குளிர்ந்த நீரை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.ஆகவே ரசாயனம் கலந்த பேஸ் பேக்கை நாம் பயன்படுத்தும் போது நாளடைவில் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியான பலன் கொடுத்தாலும் பல பக்க விளைவுகள் ஏற்படுத்தும். குறிப்பாக எளிதில் முகச்சுருக்கத்தை ஏற்படுத்தும். இயற்கையான முறைகளை பயன்படுத்தி நம் சருமத்தை பேணி காப்போம்.

Tags :
|
|