Advertisement

பொடுகு பிரச்னையை தீர்க்கும் வீட்டுப்பொருட்கள்!

By: Monisha Mon, 12 Oct 2020 12:09:30 PM

பொடுகு பிரச்னையை தீர்க்கும் வீட்டுப்பொருட்கள்!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் பிரச்னையில் ஒன்று பொடுகு தொல்லை. சிலர் முடியை சரியாக பராமரிக்காததினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சிலர் முடியை சரியாக பாதுகாத்தும் 2 நாள்கள் மட்டும் முடியை சரியாக பராமரிக்காமல் இருந்தாலே இந்த பிரச்னை ஏற்படுகிறது.

பொடுகு பிரச்னையை வீட்டில் எப்போதும் பயன்படுத்தும் முக்கியமான பொருளான பூண்டை கொன்டு சரி செய்யலாம். பூண்டு பூஞ்சை காளான்களை நீக்கும் தன்மை கொண்டவை. பொடுகை உண்டாக்கும் நுண்ணுயிர்க்கிருமிகளை வெளியேற்றும் குணங்களை கொண்டவை. சரி இந்த பூண்டை கொண்டு எப்படி பொடுகை போக்குவது என்று பார்க்கலாம்.

dandruff,garlic,honey,cloves,beauty ,பொடுகு,பூண்டு,தேன்,கிராம்பு,அழகு

தேவையான பொருள்கள்
பூண்டு – 10 பல்
தேன் – 4 தேக்கரண்டி
கிராம்பு – 4

செய்முறை
முதலாவது பூண்டையும் கிராம்பையும் நன்கு பொடியாக இடித்து கொள்ளுங்கள். இதனுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து கூந்தல் ஸ்கால்ப் பகுதி முதல் முடி முழுவதுமாக தடவி கொள்ளுங்கள். அரைமணி நேரம் கழித்து தலையை நன்கு தேய்த்து கழுவி எடுக்கவும். பூண்டு பொடுகை நீக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது . வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதனை செய்து வந்தால் முற்றிலும் பொடுகு மாறிவிடும்.

Tags :
|
|
|