Advertisement

சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கும் தேன்!

By: Monisha Thu, 10 Dec 2020 4:16:35 PM

சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கும் தேன்!

சருமத்தின் பொலிவும், மென்மையும் அதிகரிக்க தினமும் சருமத்தை தேனைக் கொண்டு பராமரித்து வரலாம். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தின் அழகை அதிகரிக்கும். இந்த பதிவில் தேனை தினமும் சருமத்தில் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

சருமத்தின் அழகையே பருக்கள் கெடுத்து விடும். அத்தகைய பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம். அதற்கு இரவில் படுக்கும் போது பருக்கள் உள்ள இடத்தின் மீது தேனைத் தடவிக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் தேனுடன், சிறிது டீ-ட்ரீ ஆயில் அல்லது லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்தும் தடவிக் கொள்ளலாம். இதனால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

skin,beauty,radiance,softness,honey ,சருமம்,அழகு,பொலிவு,மென்மை,தேன்

தேனில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தினமும் கழுவி வருவதும் நல்லது. இதனால் முகத்தில் போடப்பட்டுள்ள மேக்கப் முற்றிலும் நீங்குவதோடு, சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் இது செயல்படும்.

வறட்சியான சருமம் உள்ளவர்கள், தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சியை நீக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முடியும்.

Tags :
|
|