Advertisement

பாதவெடிப்பு பற்றிய கவலையா? இதோ உங்களுக்காக எளிமையான தீர்வு தரும் டிப்ஸ்

By: Nagaraj Fri, 08 May 2020 2:17:40 PM

பாதவெடிப்பு பற்றிய கவலையா? இதோ உங்களுக்காக எளிமையான தீர்வு தரும் டிப்ஸ்

பாதவெடிப்பு வெடிப்பு பெரும் வேதனையை தரும் ஒன்றுதான். என்ன செய்தாலும் திரும்ப திரும்ப வருகிறதே என கவலைக் கொள்கிறீர்களா? இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன் தரும்

பாதவெடிப்பு அசௌகரியமாகத்தான் இருக்கும். நல்ல அழகான உடையை உடுத்தி, இன்னும் முகத்தைழகுபடுத்திக்கொண்டு ஆனால் காலில் வெடிப்புடன் வெளியே சென்றால், அந்த ஒரு பிரச்சனையாலேயே மற்ற அலங்காரங்கங்கள் வீணாகிவிடும். நம்மை குறைவாகவும் மற்றவர்கள் மதிப்பிடக் கூடும். மற்றவர்கள் என்றில்லாமல் பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை சார்ந்த விஷயமே.

தேன் மற்றும் அரிசி மாவு

பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்

foot crackers,dill spinach,mustard oil,rice flour,honey ,பாத வெடிப்பு, வெந்தய கீரை, கடுகு எண்ணைய், அரிசி மாவு, தேன்

வேப்பிலை பேஸ்ட்

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

பப்பாளி ஸ்க்ரப்

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். . இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

foot crackers,dill spinach,mustard oil,rice flour,honey ,பாத வெடிப்பு, வெந்தய கீரை, கடுகு எண்ணைய், அரிசி மாவு, தேன்

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

வெந்தயக் கீரை

மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும். மேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும்.

Tags :