Advertisement

மேக்கப் எப்படி உங்களை அழகாக்குகிறது... எப்படி மேக்கப் போடலாம்!!!

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:59:15 PM

மேக்கப் எப்படி உங்களை அழகாக்குகிறது... எப்படி மேக்கப் போடலாம்!!!

சென்னை: மேக்கப் செட்டிங் ஸ்பிரே அடித்து, சருமத்தை மேக்கப்பிற்குத் தயார் செய்ய வேண்டும். அடுத்ததாக மேக்கப்பின் அடிப்படையாக செயல்படும், பிரைமரை (primer) சருமத்தில் பூச வேண்டும்.

எண்ணெய்பசை கொண்ட சருமத்திற்கு, ஜெல் வடிவிலான பிரைமரையும், உலர்ந்த சருமத்திற்கு, கிரீம் வடிவிலுள்ள பிரைமரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், திட்டுகள் உள்ள இடத்தில் கலர் கரெக்டரை பூசி, அதை சருமத்துடன் ஒன்றுமாறு செய்ய வேண்டும்.

blender,corneas,dot,essential,makeup,skin color, ,அவசியம், கருவளையங்கள், சரும நிறம், பிளண்டர், புள்ளி, மேக்கப்

பின்பு, கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் உதட்டை சுற்றியுள்ள கருமை நிறத்தை மறைக்க, கன்சீலரைப் (concealer) பயன்படுத்த வேண்டும். இதையும் பிளண்டர் வைத்து பிளண்ட் செய்வது அவசியம். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அதை முகத்தில் புள்ளி புள்ளியாக ஆங்காங்கே வைத்து பூச வேண்டும்.

முகத்தோடு சேர்த்துக் கழுத்திலும் பூசுவது அவசியம். அப்பொழுதுதான் முகம் தனியாக வித்தியாசமாகத் தெரியாமல் இருக்கும். பவுண்டேஷனைக் கீழ் நோக்கி தடவும் முறையே சரியானது. இவ்வாறு படிப்படியாக மேக்கப் போட வேண்டும்.

Tags :
|
|