Advertisement

மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பது எப்படி?

By: Monisha Thu, 17 Dec 2020 11:30:02 AM

மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பது எப்படி?

மழைக்காலத்தில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் அழகாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினர் மழைக்காலத்தில் தங்கள் சருமத்தை எப்படியெல்லாம் பராமரித்தால் அழகாக வைத்துக் கொள்ளலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிளின்சிங் முறையை அனைத்து வகையானது சருமத்தினரும் பின்பற்ற வேண்டும். இதனால் சருமத்துளைகளில் இருந்து எண்ணெய் அதிகம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். அதற்கு தினமும் மூன்று முறை மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். அத்துடன் வாரம் இரண்டு முறை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

அடுத்தபடியாக டோனிங் செய்ய வேண்டும். இப்படி டோனரைக் கொண்டு சருமத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறிவிடும். அதிலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுப்பது மிகவும் சிறந்தது.

rainforest,oily gum,skin,cleansing,toning ,மழைக்காலம்,எண்ணெய் பசை,சருமம்,கிளின்சிங்,டோனிங்

எண்ணெய் பசை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும். இதனால் பலர் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் சருமத்தை பராமரிக்க மாய்ஸ்சுரைசர் மிகவும் அவசியம். எனவே நீர்ம நிலையில் உள்ள மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், சருமம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்போடும் இருக்கும்.

ஃபேஸ் மாஸ்க் போடுவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலமிச்சை, தேன், ஓட்ஸ், பால், பப்பாளி, வெள்ளரிக்காய், கற்றாழை, தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி வாரம் 1-2 முறை மாஸ்க் போடுவது நல்லது.

Tags :
|