Advertisement

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

By: Monisha Thu, 15 Oct 2020 5:20:14 PM

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

சருமத்தை எவ்வளவு தான் பத்திரமாக பாதுகாத்தாலும் குளிர்காலத்தில் பல பிரச்சனைகள் நம்மை தாக்கி கொண்டே தான் இருக்கும். இந்த பதிவில் குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க நாம் செய்ய வேண்டியவைகளை குறித்து பார்க்கலாம்.

கற்றாழை
ஓய்வாக இருக்கும் போது முகத்தை இதமான நீரில் கழுவி துடைத்து கற்றாழை சாறை தடவி மசாஜ் செய்யலாம். கற்றாழையில் இருக்கும் வைட்டமின், பீட்ட கரோட்டின் போன்றவை குளிர்காலத்தில் சருமத்தில் உண்டாகும் வறட்சியை நீக்கி முகத்துக்கு தனி மினுமினுப்பை கொடுக்கும். சரும வறட்சியும், சருமத்தில் இருக்குன் வெள்ளை திட்டுகளும் மறையும்.

மாய்ஸ்சுரைஸர்
சருமத்தின் வறட்சியை தடுக்க மாய்ஸ்சுரைஸர் உதவும். ஆனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சுரைஸர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் சருமத்தை ஈரம் போக துடைத்து உலர விட்டு மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்துங்கள். இது வறண்ட சருமத்தை மென்மையாக்குவதோடு சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கவும் உதவி புரியும். முகத்துக்கு க்ரீம்களை பயன்படுத்தும் போது ஆல்கஹால் சேர்க்காத சருமத்தின் பி. ஹெச் அளவை பாதிக்காத அளவு கொண்டவற்றை மட்டும் பயன்படுத்துங்கள்.

cactus,moisturizer,fruit pack,coconut oil,water ,கற்றாழை,மாய்ஸ்சுரைஸர்,புருட்ஸ் பேக்,தேங்காய் எண்ணெய்,தண்ணீர்

புருட்ஸ் பேக்
வீட்டில் செய்யக்கூடிய ஃபேஸ் பேக் நிறைய வகைகள் உண்டு. அனைத்தையும் கலந்து போடாமல் குளிர்காலத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக் தேர்வு செய்து போடுவது நல்லது. குளிர்காலத்தில் ஃபேஸ் பேக் போட சிறந்த சாய்ஸ் பழங்கள் தான் என்கிறார்கள். எளிமையாக கிடைக்க கூடிய வாழைப்பழம் கூட உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து மீட்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களில் ஒன்றை மசித்து ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். இவை சருமத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய்
தினமும் இரவு தூங்கும் போது தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயிலை உள்ளங் கையில் தேய்த்து முகம், கழுத்து, கை, கால் பகுதிகளுக்கு மசாஜ் செய்து தூங்குங்கள். காலை எழுந்ததும் குளிப்பதற்கு முன்பு அதே போன்று தேங்காய் எண்ணெய் தொட்டு முகம், கை, கால் பகுதிகளில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து குறிப்பாக உதடு மற்றும் உதடு சுற்றிய பகுதியில் மசாஜ் செய்து குளித்தால் நாள் முழுக்க பனியில் சுற்றினாலும் உங்கள் சருமம் பொலிவாக அழகாக இருக்கும்.

தண்ணீர்
தினமும் தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியம் முதல் அழகு குறித்த அத்தனை கட்டுரைகளிலும் தவறாமல் இடம் பெறும் அறிவுரை இதுதான். சாதாரண நாட்களிலே தண்ணீர் அதிகம் குடிக்காதவர்கள் குளிர்காலத்தில் தண்ணீரை குடிப்பதே இல்லை என்பதுதான் சருமத்தின் அதிகப்படியான வறட்சிக்கு காரணம். தினமும் காலை எழும் போதே ஒரு தம்ளர் தண்ணீரோடு உங்கள் நாளை தொடங்குங்கள். உடலில் நீர்பற்றாக்குறை இல்லாமல் இருந்தாலே உங்கள் சருமத்தின் வறட்சியை மட்டும் அல்லாமல் முகப் பருக்கள் வராமலும் பாதுகாத்து கொள்ளலாம். அதனால் எங்கும் எப்போதும் கையில் தண்ணீர் பாட்டிலோடு செல்லுங்கள். அவ்வபோது தண்ணீர் குடியுங்கள்.

Tags :
|