Advertisement

அழகை அதிகரித்து வெளிப்படுத்தும் உதடுகளை பராமரிப்பது எப்படி?

By: Monisha Tue, 23 June 2020 3:39:57 PM

அழகை அதிகரித்து வெளிப்படுத்தும் உதடுகளை பராமரிப்பது எப்படி?

உடலிலேயே மிகவும் மென்மையான ஒரு பகுதி உதடுகள். இந்த உதடுகள் தான் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும். ஆனால் பலர் உதடுகளை சரியாக பராமரிக்காமல் இருக்கின்றனர். உதடுகள் பெண்களுக்கு மட்டும் அழகை கொடுப்பதில்லை, ஆண்களுக்கும் தான். எனவே உதடுகளை பராமரிப்பது மிக முக்கியம்.

காலநிலை மாற்றங்களால் உதடுகளில் வறட்சி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது, உதடுகளின் மீதுள்ள ஈரப்பசையானது வெளியேற்றப்பட்டு, வறட்சியை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், காலநிலை மாறும் போது, அதிகப்படியாக வேலையின் காரணமாக வெளியே சுற்ற வேண்டியிருப்பதால், குறிப்பாக குளிர்காலம், கோடைகாலம் போன்றவற்றின் போது மேற்கொள்ளும் போது, உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புக்கள் ஏற்படுகிறது. எனவே இக்காலங்களில் உதடுகளை தவறாமல் முறையாக மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும்.

lips,beauty,care,women,men ,உதடுகள்,அழகு,பராமரிப்பு,பெண்கள்,ஆண்கள்

உதடு வறட்சியால் வெடிப்புக்கள் அதிகமானால், அப்போது லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக உதடுகளுக்கு லிப் பாம்களை அனைத்து பருவ காலத்திலும் மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அப்போது தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். இப்படி நீரை அதிகம் பருகி வந்தால், உடல் வறட்சி நீங்குவதுடன், உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்

lips,beauty,care,women,men ,உதடுகள்,அழகு,பராமரிப்பு,பெண்கள்,ஆண்கள்

உடலில் அசிட்டிக் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். அப்போது உதடுகளின் வறட்சியைப் போக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டு, அசிட்டிக்கின் அளவை குறைக்க வேண்டும். அப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு வந்தால், அசிட்டிக்கின் அளவு குறைந்து அல்கலைன் அளவானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எப்போதும் உதடுகளில் எச்சல் வைத்துக் கொண்டே இருந்தால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயானது குறைந்து, வறட்சி அடைய ஆரம்பிக்கும். எனவே உதடுகளில் எப்போதும் எச்சில் வைப்பதை நிறுத்துங்கள். உதடுகளில் வறட்சி அடைவது குறையும்.

Tags :
|
|
|
|