Advertisement

சரும தன்மை சமமில்லாமையை சரி செய்வது எப்படி?

By: Monisha Tue, 01 Sept 2020 4:15:36 PM

சரும தன்மை சமமில்லாமையை சரி செய்வது எப்படி?

சரும தன்மை சமமில்லாமல் இருப்பது உங்கள் அழகு கலையை பாதிக்கிறதா? அநேகமாக எல்லோருமே இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சமமில்லாத சரும தன்மை, குறிப்பாக முகத்தில் உண்டாகும் போது, சோர்வை அளிக்கலாம். உதடுகள் மற்றும் கண்ணத்தை சுற்றியுள்ள சருமம், மொத்த முகத்தையும் மங்கச்செய்து பொலிவிழக்க வைக்கலாம். இது சோர்வளிக்கவே செய்யும். இதனை சரி செய்ய இயற்கையான சில தீர்வுகளை தெரிந்து கொள்ளுவோம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்ஸ் ஸ்கின் செல்களை தடுத்து, அடர் திட்டுகளை குணமாக்குகிறது. எனவேதான், எலுமிச்சை சாறு உங்கள் சருமத்தை இயற்கையாக பிளிச் செய்வது என்று வரும் போது எலுமிச்சை சாறு மிகச்சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை வாயைச்சுற்றியுள்ள பகுதியில் 10 முதல் 15 நிமிடங்கள் மென்மையாக தேய்த்துக்கொண்டு அதன் பிறகு முகத்தை கழுவிக்கொள்வது தான்.

skin,lemon,papaya,potatoes,turmeric ,சரும தன்மை,எலுமிச்சை,பப்பாளி,உருளைக்கிழங்கு,மஞ்சள்

ஓட்மீல் ஸ்கிரப்
பொலிவான தோற்றத்தை பெறுவதில் ஓட்மீல் உங்களுக்கு இயற்கையாக உதவுகிறது. இறந்த செல்களை, படிந்திருக்கும் அழுக்குகளை உதிரச்செய்வதன் மூலம் இது சமமான சரும தன்மையை அளிக்கிறது. இந்த ஸ்கிரப்பை தயார் செய்ய, உங்களுக்கு தேவை எல்லாம் ஓட்மீல், தக்காளி சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மட்டும் தான். இந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு சிறிது நேரம் ஸ்கிரப் செய்யவும். அதன் பிறகு தண்ணீரால் கழுவிக்கொள்ளவும்.

பப்பாளி
வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த பப்பாளி உங்கள் வாயைச்சுற்றியுள்ள பகுதி பொலிவாகவும், சமமான தன்மை பெறவும் உதவுகிறது. பப்பாளி ஸ்லைஸ் மற்றும் பன்னீர் கொண்டு கெட்டியான கலவை தயாரித்து, அதை சருமத்தில் பூசிக்கொண்டு 30 நிமிடம் இருக்கவும். அதன் பிறகு குளிரிந்த நீரில் கழுவிக்கொள்ளவும்.

Tags :
|
|
|