Advertisement

கூந்தலில் ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம்?

By: Monisha Sat, 01 Aug 2020 4:20:38 PM

கூந்தலில் ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம்?

முடி சிக்கிக் கொண்டால் அந்த சிக்கலை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட முடியாது. சில நேரங்களில் தலையோடு சேர்த்து வலிக்க ஆரம்பித்து விடும். அதை விட முக்கியமானது கூந்தல் உடைந்து போக ஆரம்பித்து விடும். கூந்தலில் இப்படி ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

உங்க தலைமுடியில் முடிச்சு விழுந்து சிக்கலாகுவதற்கு பிளவுபட்ட முனைகள் ஒரு காரணமாக இருக்கலாம். இது உங்கள் தலைமுடியை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர விடாமல் தடுக்கிறது. எனவே பிளவுபட்ட முனைகளை வெட்டி உங்க கூந்தலை அழகாக ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள்.

நிறைய பெண்கள் தூங்கும் போது கூட தலைமுடியை விரித்து போட்ட படி தூங்குகின்றனர். இதனால் காலையில் எழுந்து தலை வாரும் போது நிறைய சிக்கல்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தூங்கும் போது உங்க தலைமுடியை எப்பொழுதும் பின்னிக் கொள்ளுங்கள். இதனால் உங்க தலைமுடியும் சிக்கல் ஆகாமல் அப்படியே இருக்கும்.

hair,complexity,beauty,humidity,remedy ,கூந்தல்,சிக்கல்,அழகு,ஈரப்பதம்,தீர்வு

ஈரப்பதம் உங்க தலைமுடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். இது உங்க முடியை சிக்கலாக்கி விடும். எனவே உங்க கூந்தலை விரித்து போடாமல் எப்பொழுதும் பின்னலிட்டு கொள்வது முடி சிக்கலாகாமல் தடுக்க உதவும்.

அதே போல் வெளியில் செல்லும் போதும், வண்டியில் செல்லும் போதும் முடியை விரித்து போட்டுகொண்டு சொல்லாதீர்கள். அப்படி சென்றால் காற்றில் பறக்கும் உங்கள் முடி அதிக சிக்கலை ஏற்படுத்தும். மேலும் முடி உடையவும் செய்யும். எனவே வண்டியில் செல்லும் போது தலையை துணியால் கட்டிக்கொண்டு செல்லுங்கள். அப்போது தான் முடியை பாதுகாக்க முடியும்

Tags :
|
|