Advertisement

அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை இயற்கை வழியில் சரி செய்வது எப்படி?

By: Monisha Mon, 02 Nov 2020 7:36:04 PM

அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை இயற்கை வழியில் சரி செய்வது எப்படி?

முகத்தின் அழகை கெடுக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அழகைக் கெடுக்கும் வகையில் தோன்றும் முகப்பருக்கள் முக அழகை சீர் குலைப்பதோடு சருமத்தையும் பாதிக்க செய்து விடுகிறது. இந்த பதிவில் இயற்கை முறையில் எப்படி முகப்பருவை குறைப்பது என்று பார்க்கலாம்.

டூத் பேஸ்ட்
முகப்பரு உள்ள இடத்தில் ஐஸ் கட்டிகளை பருக்கள் உள்ள இடத்தில் தடவி அதன் பின் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும், பருக்களும் நீங்கும். பேஸ்டில் ஹைட்ரஜன் பராக்ஸைட் இருப்பதால், சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இதைத் தவிர்க்கலாம்.

வினிகர்
இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாத அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் இதில் சரும நன்மைகள் மிக அதிகம்.

toothpaste,vinegar,cucumber,yeast,acne ,டூத் பேஸ்ட்,வினிகர்,வெள்ளரிக்காய்,ஈஸ்ட்,முகப்பரு

தேன்
தேன் பருக்களுக்கு சிறந்த ஆண்டி மைக்ரோபியலாக இருக்கும். பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

வெள்ளரிக்காய்
சருமத்தை மென்மையாக்கக் கூடிய சக்தி வெள்ளரிக்காயில் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் A, E மற்றும் C நிறைந்துள்ளன. இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுடைய அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும். வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள் அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவி வர முகப்பரு சரியாகும்.

ஈஸ்ட்
ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து பின் குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும்.

Tags :
|