Advertisement

உங்கள் சரும வகையை தெரிந்துகொள்வது எப்படி?

By: Monisha Wed, 16 Sept 2020 4:37:20 PM

உங்கள் சரும வகையை தெரிந்துகொள்வது எப்படி?

சருமப் பராமரிப்பு தான் அழகு மற்றும் சரும ஆரோக்கியத்தின் அடிப்படை. சருமமே உங்கள் உடலின் மிகப்பெரிய உறுப்பு, அடிக்கடி அழுத்தம், மாசுபாடு, வானிலை மற்றும் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. அழகுக்காக மட்டுமின்றி, பல்வேறு முக்கியமான காரணங்களுக்காகவும் சருமத்தின் ஆரோக்கியம் முக்கியமானது. இது உடலின் வெப்பநிலையைச் சீராக்கப் பயன்படுகிறது, உடலுக்குள்ளே மாசு நுழையாமல் தடுக்கும் வடிகட்டியாக, தடுப்பானாக செயல்படுகிறது. புதிய செல்கள் உருவாவதும், பழைய செல்கள் அழிவதும் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயல்முறை. இதை நன்கு பராமரிக்க, முறையான சரும பராமரிப்பு அவசியம்.

உங்கள் சரும வகையைத் தீர்மானிப்பது, உங்கள் சருமத்தில் பயன்படுத்துவதற்கான சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவும். சருமத்தை நன்கு பராமரிக்கவும் உதவும். சரும வகைகள் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருந்தாலும், நீங்கள் பொருத்திக் கொள்ளக் கூடிய மூன்று பெரிய வகைகள் இருக்கின்றன எண்ணெய்ப்பசை உடைய சருமம், இயல்பான/காம்பினேஷன் சருமம் மற்றும் வறண்ட சருமம் என்பவையே அவை.

skin,beauty,face,care,cleanser ,சருமம்,அழகு,முகம்,பராமரிப்பு,க்ளென்சர்

சரும வகையைத் தெரிந்துகொள்ள உங்கள் முகத்தை மிதமான க்ளென்சர் மூலமாக கழுவி விட்டு, உலர்வாக துடைத்து விட்டு, அப்படியே அரை மணிநேரம் விட்டு விடவும். உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுக்கு, பளபளப்பு எதுவும் தெரிந்தால், உங்களுக்கு ஆயில் சருமம். அப்படி எதுவும் தெரியவில்லை என்றால், மேலும் அரை மணிநேரம் காத்திருங்கள். இப்போது பளபளப்பு உங்கள் மூக்கு மற்றும் நெற்றியில் மட்டும் இருந்தால், உங்களுக்கு சாதாரண/காம்பினேஷன் சருமம். உங்கள் சருமம் வறண்டு போன உணர்வு தோன்றினால், உங்களுக்கு வறண்ட சருமம் இருப்பதாக பொருள்.

உங்கள் சரும வகையைக் கண்டுபிடித்த பிறகு, ஒரு நல்ல மேக்-அப் ரீமூவிங் நுட்பத்தைத் தேர்வு செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் சருமத்தில் இருந்து எல்லா வகையான மேக்-அப், அழுக்கு, மாசுகள் மற்றும் சருமத்தின் நுண் துளைகளில் படிந்து விடக் கூடிய பிற மாசுகளை முற்றிலும் அகற்ற வேண்டும். பின்னர் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில், மிருதுவான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும்.

Tags :
|
|
|
|