Advertisement

மூலிகை பேஸ் பேக் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

By: Monisha Tue, 15 Sept 2020 3:37:17 PM

மூலிகை பேஸ் பேக் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

சருமத்தை அழகுபடுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி நாம் சருமத்தை அழகுபடுத்தும் போது இயற்கை மூலிகைகளை கொண்டே அழகுபடுத்தலாம். அதனால் நமக்கு பண செலவும் குறைவு தான், அதுமட்டுமல்லாமல் முகத்தில் தேவையில்லாமல் முடி வளர்வது, பருக்கள் வருவது, வறண்ட சருமம் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம். அப்படிப்பட்ட நன்மைகள் நிறைந்த இந்த பேக் வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்
குப்பை மேனி இலை – 15
புதினா இலைகள் – 15
வேப்பிலை – 5
வைட்டமின் இ ஆயில் மாத்திரை – 1
துளசி – சிறிதளவு
தயிர் – சிறிதளவு

natural,herbal,base pack,vitamin e,yogurt ,இயற்கை,மூலிகை,பேஸ் பேக்,வைட்டமின் இ,தயிர்

புதினா: புதினா இலைகளில் உள்ள சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை சருமத்தில் எண்ணெய் சுரப்பது மற்றும் முகப்பரு போன்றவற்றை தடுக்கிறது. முகப்பரு வெடிப்புடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கும் வைட்டமின் சி சத்து இருப்பதால் சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.

குப்பை மேனி: குப்பை மேனி இலை முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குகிறது. முகத்தில் பருக்கள் வருவதையும் புண்களையும் வராமல் செய்கிறது. மேலும் சில பெண்களுக்கு உதட்டின் மேல், தாடையில் முடிகள் இருக்கும். இதனை போக்கவும் குப்பை மேனி பேக் சிறந்தது .

தயிர்: தயிர் இயற்கையான ப்ளீச் ஆக செயல்பட்டு முகத்தை சுத்திகரிக்கிறது.

வேப்பிலை: வேப்பிலையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பழுப்பு நிறத்தோல் போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது.

natural,herbal,base pack,vitamin e,yogurt ,இயற்கை,மூலிகை,பேஸ் பேக்,வைட்டமின் இ,தயிர்

வைட்டமின் இ ஆயில்: வைட்டமின் இ ஆயிலை பயன்படுத்தினால் நினைத்தது போன்று சருமத்தை விரைவாக நிரந்தரமாக மென்மையாக்க முடியும்

துளசி: பல மருத்துவ குணங்களை கொண்ட துளசி முகத்தில் இருக்கும் கிருமிகளையும் வெளியேற்றுகிறது. இதனால் முகம் எப்போதும் பளிச் என்று மின்னும் .

செய்முறை
முதலாவது குப்பைமேனி, புதினா, வேப்பிலை போன்றவற்றை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளுங்கள். அதன்பின் அரைத்த இந்த கலவையுடன் வைட்டமின் இ ஆயில் மாத்திரை கலந்து கொள்ளுங்கள். பின்பு முகத்தை நன்கு சுத்தம் செய்து விட்டு முகம் முதல் கழுத்து வரை இந்த பேக்கை போடுங்கள். அரைமணி நேரம் கழித்தது வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். மாதம் இரண்டுமுறை இதை செய்துவந்தால் முகத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் பளபளப்பாக இருக்கலாம்.

Tags :
|