Advertisement

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி?

By: Monisha Sat, 06 June 2020 12:32:59 PM

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி?

முதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம், கழுத்தை துடையுங்கள்.

ஈரம் காய்ந்ததும் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன் மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.

கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் என எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். தற்போது கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்கு இப்படி செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நீரில் கழுவி விடுங்கள்.

facial,lemon juice,aloe gel,olive oil,besan flour ,ஃபேஷியல்,எலுமிச்சை சாறு,கற்றாழை ஜெல்,ஆலிவ் எண்ணெய்,கடலை மாவு

கடலை மாவு 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். முகத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். இறுதியாக கழுவும் முன் கொஞ்சம் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டுக் கழுவுங்கள். அவ்வளவுதான் உங்கள் முகம் இப்பொது ஜொலிக்கும்!

Tags :
|