Advertisement

உங்கள் சருமம் அழகா ஜொலிக்க இடத்திற்கு ஏற்றப்படி மேக்கப் செய்வது எப்படி?

By: Monisha Sat, 26 Sept 2020 12:47:37 PM

உங்கள் சருமம் அழகா ஜொலிக்க இடத்திற்கு ஏற்றப்படி மேக்கப் செய்வது எப்படி?

உங்கள் சருமம் அழகா ஜொலிக்க இடத்திற்கு ஏற்றப்படி மேக்கப் செய்வது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

முகம்
மாசுமருவற்ற சருமத்தைப் பெற, முகத்தை நன்கு சுத்தம் செய்யவும். சருமம் வறண்டு இருந்தால், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தலாம். மேக்அப் கலையாமல் இருக்க பிரைமர். அடுத்து, சரும நிறத்திற்கு ஒத்துப்போகும் ஃபவுண்டேஷன் பயன்படுத்தவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க கன்சீலர் உங்களுக்கு உதவும்.

கன்னங்கள்
பிரகாசமான தோற்றத்தைப் பெற, உங்கள் கன்ன எலும்புப் பகுதியில் பிரான்சர் பயன்படுத்தவும் கன்னங்களுக்கு மேலே, ஹைலைட்டர் பவுடர் பூசவும். அதை மூக்கு, தாடை, நெற்றியிலும் பூசி, நன்றாக பிளெண்ட் செய்யவும்.

skin,beauty,makeup,eyeshadow,lipstick ,சருமம்,அழகு,மேக்கப்,ஐஷாடோ,லிப்ஸ்டிக்

கண்கள்
தங்க நிற ஐஷாடோவை கண் இமையில் முதலில் பயன்படுத்தவும். ஜெல் ஐ&லைனரைக் கொண்டு அடர்த்தியான ஒரு கோட்டை வரையவும். முடிக்கும் இடத்தில் ஒரு வளைவை உருவாக்கவும். மேல் மற்றும் கீழ் இமைகளில் இரண்டு முறை மஸ்காராவைப் பூசவும். கண்ணிமையின் உள் ஓரங்களில் ஹைலைட்டரைக் கொண்டு முடிக்கவும்.

உதடுகள்
உங்கள் உதட்டில் இருந்து இறந்த செல்களை முதலில் நீக்கவும். லிப் பாமை தடவவும். இதைத் தொடர்ந்து கிரீமி கோரல் நிற லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தவும்.

இடத்திற்கு ஏற்றபடி
வேலை இடத்திற்கு தங்க நிற ஐஷாடோவை தவிர்த்துவிட்டு கண்களுக்கு மேட் பீய்ஜ் ஷாடோ பயன்படுத்தவும்.
திருமண நிகழ்விற்கு மென்மையான கோரல் நிற லிப் ஸ்டிக்கிற்கு பதில் ஒயின் நிற லிப்ஸ்டிக் சிறந்தது.
காதல் டேட்டிற்கு கீழ் இமையின் கண் மையை கலைத்து விட்டால் ஸ்மோக்கி கண்கள் தயார்.

Tags :
|
|
|