Advertisement

நரை முடியை போக்கும் இயற்கை ஹேர் ஆயில் செய்வது எப்படி?

By: Monisha Mon, 02 Nov 2020 7:36:14 PM

நரை முடியை போக்கும் இயற்கை ஹேர் ஆயில் செய்வது எப்படி?

சிலருக்கு இளவயதிலேயே முடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படி பட்டவர்களுக்கு ஒரு அற்புதமான இயற்கை ஹெயர் ஆயில் இது. இந்த இயற்கை ஹேர் ஆயில் எப்படி செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் 1 லிட்டர்
மஞ்சள் கரிசலாலாங்கண்ணி அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணி 6 கைப்பிடி
மருதாணி 6 கைப்பிடி
கருவேப்பிலை 4 கைப்பிடி
வேப்பிலை 10 கொத்து
செம்பருத்தி இலை 6 கைப்பிடி
நொச்சி தழை 2 கைப்பிடி அளவு
கற்றாழை 3 இலைகள்
ஆமணக்கு இலை 5 இலை
முருங்கை கீரை 2 கைப்பிடி அளவு
எலுமிச்சம் பழம் 2
நெல்லிக்காய் 10
சின்ன வெங்காயம் 10
கசகசா 6 ஸ்பூன்
பாதாம் பருப்பு 10
அவுரி இலை பொடி 50 கிராம்
மரிக்கொழுந்து காய்ந்தது ஒரு கொத்து அல்லது மல்லிகைப்பூ ஒரு கைப்பிடி
செம்பருத்தி பூ 5
கருவேலப்பட்டை 5 எண்ணம்
தேங்காய் பால் 1 டம்ளர்
சுரைக்காய் சாறு 1 டம்ளர்

gray hair,coconut oil,natural,hair oil,beauty ,நரை முடி,தேங்காய் எண்ணெய்,இயற்கை,ஹேர் ஆயில்,அழகு

செய்முறை
முதலில் செடியில் உள்ள இலைகளை தனித்தனியாக பறித்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தேங்காய் எண்ணை விட்டு அதில் கருவேலப்பட்டையை 24 மணி நேரங்கள் ஊற விட வேண்டும். பாதாம் கொட்டை மற்றும் கசகசாவை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பறித்து வைத்திருக்கும் இலைகளை எல்லாம் சேர்த்து மை போல அரைக்க வேண்டும். அதுபோல ஊறவைத்திருக்கும் பாதாம் மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாகியவுடன் தேங்காய் எண்ணையை ஊற்றி நன்றாக சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடாகியவுடன் ஒரு டம்ளர் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். ஒரு நிமிடம் நன்றாக கிளறி அதன் பிறகு சுரைக்காயை சாறு 1 டம்ளர் விட வேண்டும். இதை நன்றாக கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பாதாம் மற்றும் கசகசா கலவையை ஊற்ற வேண்டும். மீண்டும் கலவையை நன்றாக கலக்கி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் இலைகள் கலவையை சேர்க்க வேண்டும். சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக கருப்பாக மாறும் வரை வேகவைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்து பிரிந்து வந்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து கொள்ளுங்கள். இதை ஒரு 24 மணிநேரம் அப்படியே வித்து விடுங்கள்.

24 மணிநேரம் கழித்த பிறகு இந்த எண்ணையை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஏற்கனவே தேங்காய் எண்ணெய் கருவேலப்பட்டை சேர்த்து ஊறவைத்திருக்கும் கலவையை நாம் காய்ச்சிய எண்ணையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.அருமையான கருமையான முடியை வளர்க்கும் ஹெயர் ஆயில் ரெடி. இந்த எண்ணையை நீங்கள் தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வரும் பொழுது உங்கள் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Tags :