Advertisement

வாழைப்பழத்தை வைத்து சருமத்தை அழகாக்குவது எப்படி?

By: Monisha Tue, 26 May 2020 1:11:53 PM

வாழைப்பழத்தை வைத்து சருமத்தை அழகாக்குவது எப்படி?

வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.

ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, கெட்டி தயிர் மற்றும் தேன், ஓட்ஸ் மாவு கலந்து குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி காய்ந்ததும் குளிக்கலாம். இதனை வாரம் ஒருமுறை செய்து வரலாம்.

beautification,banana,wheat flour,oil skin,chicken box wounds. ,அழகுக்குறிப்பு,வாழைப்பழம்,கோதுமை மாவு,எண்ணெய் சருமம்,அம்மைத் தழும்புகள்

ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள்.
அதன்பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின் ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்தின் மெருகு கூடி பளபளப்பாகும்.

ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறு கொத்து வேப்பந்தளிர், கொஞ்சம் இளநீர், கஸ்தூரி மஞ்சள் பவுடர்.. இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.

Tags :
|