Advertisement

வியர்குரு பிரச்சனையா? சரி செய்ய இதோ இருக்கு வழி..!

By: Monisha Mon, 08 June 2020 3:19:36 PM

வியர்குரு பிரச்சனையா? சரி செய்ய இதோ இருக்கு வழி..!

கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.

வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தாங்க. இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

sweat,cactus gel,ice cube,sandalwood powder,cucumber ,வியர்குரு,கற்றாழை ஜெல்,ஐஸ் கட்டி,சந்தன பவுடர்,வெள்ளரிக்காய்

சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும்.

Tags :
|