Advertisement

மழைக்காலத்தில் சருமத்தை சரியாக கவனிப்பது எப்படி?

By: Monisha Fri, 25 Sept 2020 11:18:26 AM

மழைக்காலத்தில் சருமத்தை சரியாக கவனிப்பது எப்படி?

மழைக்காலம் சருமத்திற்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் ஈரப்பதமான காலநிலை சரும செல்களுக்கு ஒத்துக்கொள்ளாது. மற்ற பருவக்காலங்களை விட மழைக்காலங்களில்தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும்.

பெண்கள் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. இருண்ட மேகங்களுக்கு பின்னால் சூரியன் மறைந்திருக்கும் என்றாலும், புற ஊதாக்கதிர்வீச்சுகளின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். அக்கதிர்வீச்சுகள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் கோடை காலம் போல் அதன் வீரியம் இருக்காது என்பதால் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீனை அதிகம் பயன்படுத்தக்கூடாது.

மழைக்காலத்தில் குடிநீர் பருகுவதை குறைத்தால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதை ஈடுகட்ட தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது. அது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

rainy season,skin,sunscreen,softness,moisture ,மழைக்காலம்,சருமம்,சன்ஸ்கிரீன்,மென்மை,ஈரப்பதம்

மழை நீரில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் அதில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடக்கூடும். அப்படியிருக்கையில் மேக்கப் செய்வது அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முகப்பரு பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மேக்கப் தேவையில்லை. ஈரப்பதத்தன்மை கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி சரும துளைகளை அடைக்காமல் பாதுகாக்கலாம்.

மழைக்காலத்தில் நிறைய பேர் முகம் கழுவு வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் முகம் கழுவாவிட்டால் சருமத்தில் அழுக்குகள் தேங்கிவிடும். அதனால் சரும எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மழைக்காலத்தில் மூலிகை தன்மை கொண்ட பேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்துவது சிறப்பானது.

கோடை காலத்தை போலவே மழைக்காலத்திலும் சரும செல்கள் உதிரத்தொடங்கும். அழுக்குகள், இறந்த செல் அடுக்குகளை அப்புறப்படுத்த இது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள் அடைப்பட்டுவிடும். சரும நோய்த்தொற்றுகளும் உண்டாகும்.

Tags :
|