Advertisement

அதிகப்படியான மேக் அப்பை எப்படி சரி செய்யலாம்?

By: Monisha Thu, 25 June 2020 4:44:23 PM

அதிகப்படியான மேக் அப்பை எப்படி சரி செய்யலாம்?

திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் உடனே மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டால் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.

மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

makeup,facial cleanser,lipstick,beauty ,மேக் அப்,பேஷியல் கிளன்சர்,லிப்ஸ்டிக்,அழகு

அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.

கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம். இவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது.

பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது.

makeup,facial cleanser,lipstick,beauty ,மேக் அப்,பேஷியல் கிளன்சர்,லிப்ஸ்டிக்,அழகு

மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.

Tags :
|