Advertisement

கருவளைம் வந்து விட்டதா? கவலைப்படாதீங்க உங்களுக்காக சில டிப்ஸ்!

By: Monisha Thu, 18 June 2020 3:58:09 PM

கருவளைம் வந்து விட்டதா? கவலைப்படாதீங்க உங்களுக்காக சில டிப்ஸ்!

பெண்களுக்கு முக அழகைத்தரும் முக்கிய உறுப்பு கண்கள். பல்வேறு காரணங்களால் கண்களின் கீழ் கருவளையம் ஏற்படுகிறது. இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க இங்கு பல இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி உங்கள் அழகை மீண்டும் பெறுங்கள்.

உருளைக்கிழங்கு சாறு: இது மிகவும் எளிமையான குறிப்புதான். உருளைக் கிழங்கு சாறு எடுத்துக்கொண்டு கண்களைச் சுற்றிலும் பஞ்சால் ஒத்தடம் தர வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வாருங்கள். கருவளையம் நீங்கும்.
டீ பை: க்ரீன் டீ பையை தண்ணீரில் நனைத்து இரு கண்களிலும் அப்படியே வைத்து 10 நிமிடங்கள் அமரவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கண்களைச் சுற்றிலும் கருமை நீங்கிவிடும்.

women,beauty,eyes,dark circle,tips ,பெண்கள்,அழகு,கண்கள்,கருவளைம்,டிப்ஸ்

தக்காளி சாறு: தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து பருத்தித் துணியில் நனைத்து கண்களைச் சுற்றி தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதை தினம் இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு பழச் சாறை கண்களை மூடி ஒத்தடம் தாருங்கள். பின் ஆரஞ்சு பழ சாறில் முக்கி எடுத்த பருத்தித் துணியை கண்களில் வைத்து ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். இப்படி தினமும் தொடர்ந்து செய்து வாருங்கள். கருவளையம் பறந்து போகும்.

women,beauty,eyes,dark circle,tips ,பெண்கள்,அழகு,கண்கள்,கருவளைம்,டிப்ஸ்

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை பலரும் குளிர்ச்சிக்காக கண்களில் வைத்திருக்கக் கூடும். பெரும்பாலும் பார்லர்களில் ஃபேஷியலுக்கு வெள்ளரிதான் பயன்படுத்துவார்கள். இது குளிர்ச்சிக்கு மட்டுமல்ல. கண்களின் கருவலையத்தையும் போக்கும். வெள்ளரியின் சாறு பிழிந்து அதை பருத்தித் துணியால் நனைத்து ஒத்தடம் கொடுங்கள். பின் வெள்ளரி ஸ்லைசை கண்களில் 5 நிமிடங்கள் வைத்துக் ஒய்வெடுங்கள்.

கற்றாழை சாறு: கற்றாழை அழகு குறிப்பில் எப்போதும் இடம் பெறும். அந்த வகையில் கற்றாழை கருவலையத்தையும் நீக்கி கண்களுக்குக் குளிர்ச்சி தரும். கற்றாழை சாறு எடுத்து அதை பஞ்சில் நனைத்து கண்களைச் சுற்றித் தடவவும். இதை தினமும் செய்து வந்தால் சிறந்த ரிசல்ட் கிடைக்கும்.

Tags :
|
|
|