Advertisement

காஜலை சரியாக நீக்க தெரியவில்லையா? கவலைப்படாதீங்க உங்களுக்காக சில டிப்ஸ்!

By: Monisha Wed, 17 June 2020 4:34:02 PM

காஜலை சரியாக நீக்க தெரியவில்லையா? கவலைப்படாதீங்க உங்களுக்காக சில டிப்ஸ்!

பெண்கள் கண்களில் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று காஜல். காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை காஜலை சரியாக நீக்க தெரியாமல் இருப்பதுதான். அத்தகைய பிரச்சனையை சரிசெய்ய உங்களுக்காக சில டிப்ஸ்கள்!

தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும்.

அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் கிரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.

women,beauty,eyes,kajal,tips ,பெண்கள்,அழகு,கண்கள்,காஜல்,டிப்ஸ்

காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும். இவற்றை செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.

Tags :
|
|
|
|