Advertisement

உங்கள் முகத்தில் படிந்த வடுக்களை அகற்றுவது எப்படி??

By: Monisha Wed, 16 Sept 2020 4:07:08 PM

உங்கள் முகத்தில் படிந்த வடுக்களை அகற்றுவது எப்படி??

முகப்பரு என்பது யாரும் தப்பிக்க முடியாத மிகப்பெரிய சரும பிரச்சனையாக இருக்கிறது. அழியாமல் தங்கிவிடும் முகப்பரு வடுக்கள், கரும் புள்ளிகள் இதை மேலும் மோசமாக்குகின்றன. உங்கள் முகத்தில் படிந்த இந்த வடுக்களை எப்படி அகற்றுவது என கவலைப்படுகிறீர்களா? இதற்கான தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கிறது.

சந்தனம் மற்றும் பன்னீர் கலைவை மூலம் முகத்தில் உள்ள குறைபாடுகளைகளைய முடியும். உங்கள் தேவைக்கேற்ப பன்னீருக்கு பதில் பாலையும் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த கலவையை பூசி, ஒரு சில நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.

அப்பழுக்கில்லாத, மென்மையான, பொலிவு மிக்க சருமத்தை, இந்த எளிய வீட்டுக்குறிப்பு மூலம் பெறலாம். சருமத்திற்கான மிகச்சிறந்த மாய்ஸ்சரைசரான ஆலோவேராவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்துக்கொள்ளவும். 15 நிமிடங்கள் இது முகத்தில் அப்படியே இருக்கட்டும். பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

acne,skin,beauty,face,scars ,முகப்பரு,சருமம்,அழகு,முகம்,வடுக்கள்

பால் மற்றும் நட்மக் தூளை கலந்து கொள்ளவும். இந்த கலைவை வடுக்களை நீக்குவதோடு, ஆரோக்கியமான பொலிவையும் அளிக்கிறது. நட்மக் தூளில் எசன்ஷியல் ஆயில்கள் உள்ளன. சருமத்தை குணமாக்கும் தன்மை இவற்றுக்கு உள்ளன. சிறந்த பலன்பெற இரவு முகத்தில் பூசிக்கொண்டு அது செய்யும் அற்புதத்தை உணருங்கள்.

பொடியாக்கப்பட்ட பாதாம் மற்றும் பாலை ஒன்றாக கலந்து அதை சருமத்தின் மீது பூசிக்கொள்ளவும். பாதாம், வயோதிக தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளதால், நுண் கோடுகள், சுருக்கங்களை நீக்குகிறது. இந்த பேஸ் பேக் உங்கள் தோற்றத்தை இளமை மிக்கதாக மாற்றும்.

Tags :
|
|
|
|