Advertisement

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...இதோ சில இயற்கை குறிப்புகள்!

By: Monisha Mon, 29 June 2020 12:10:50 PM

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...இதோ சில இயற்கை குறிப்புகள்!

சருமத்தின் அழகை பத்திரமாக பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை பொருட்களைக் கொண்டு சரும அழகை அதிகரிக்க செய்ய வேண்டும் அப்போது சருமம் வயதானாலும் பாதுகாப்பாக இருக்கும். சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கும் இயற்கை வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

1) சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

2) 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.

unwanted hair,skin,beauty,lemon,honey ,தேவையற்ற முடி,சருமம்,அழகு,எலுமிச்சை,தேன்

3) மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

4) ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

5) தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.

Tags :
|
|
|