Advertisement

க்ரீன் டீயை வைத்து பாடி ஸ்கிரப் செய்வது எப்படி?

By: Monisha Sat, 31 Oct 2020 4:51:08 PM

க்ரீன் டீயை வைத்து பாடி ஸ்கிரப் செய்வது எப்படி?

க்ரீன் டீ உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. இது உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் உதவுகிறது. இது முகத்தில் ஏற்படும் சரும வீக்கம், ரேசஸ், தடிப்புகள் ஆகியவற்றை நீக்கும் தன்மை கொண்டது. மேலும் நம்முடைய சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பொலிவு படுத்தும் தன்மை கொண்டது. இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த க்ரீன் டீயை வைத்து எப்படி பாடி ஸ்கிரப் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
சர்க்கரை – 1/4 கப்
ஆலிவ் ஆயில் – 4 ஸ்பூன்
க்ரீன் டீ இலைகள் – சிறிதளவு
க்ரீன் டீ பேக் – 1 அல்லது 2

green tea,body scrub,olive oil,sugar,beauty ,க்ரீன் டீ,பாடி ஸ்கிரப்,ஆலிவ் ஆயில்,சர்க்கரை,அழகு

செய்முறை
முதலாவது ஒரு பௌலில் சர்க்கரையைஎடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நல்ல ஸ்கிரப்பாக செயல்பட்டு, நம்முடைய சருமத்துக்கு பொலிவை தரும். அதன்பின் சர்க்கரையுடன் சிறிதளவு ஆலிவ் ஆயிலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் ஆன்டி-ஆக்சிடண்ட்டு பண்புகள் கொண்டதால் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.

இந்த ஆலிவ் ஆயில் கலவையுடன் ஒரு க்ரீன் டீ பேக் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதன்பின் அதில் எடுத்து வைத்திருக்கும் க்ரீன் டீ இலைகளைக் கொண்டு டிக்காஷன் தயார் செய்து அதையும் இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை நன்கு பேஸ்ட் போல தயார் செய்து முகம், கை, கழுத்து, கால் ஆகிய பகுதிகளில் தடவி ஸ்கிரப் செய்யலாம்.

இதனை சருமத்தில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்குக் கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால் உங்கள் முகம் மற்றும் சருமம் பளிச்சென மாறும்.

Tags :
|