Advertisement

ஷேவிங் கிரீமுக்கு மாற்றாக இதை பயன்படுத்திப் பாருங்க ரெம்ப அழகா தெரிவீங்க!

By: Monisha Sat, 20 June 2020 6:32:05 PM

ஷேவிங் கிரீமுக்கு மாற்றாக இதை பயன்படுத்திப் பாருங்க ரெம்ப அழகா தெரிவீங்க!

காலையில் எழுந்து ஷேவ் செய்ய ரெடியான பின் ஷேவிங் க்ரீம் டப்பா காலியாக இருந்தால் ரெம்ப டென்ஷன் ஆகிவிடும். ஆனால் இனி டென்ஷன் ஆக அவசியம் இல்ல. ஏனென்றால் ஷேவிங் கிரீமுக்கு மாற்றாக வேறு சில பொருள்களைப் பயன்படுத்தலாம். சூப்பராவும் அழகாவும் இருப்பிங்க!

பேபி ஆயில்
பொதுவாக வீட்டில் குழந்தைகள் யாராவது இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக பேபி ஆயில் இருக்கும். இந்த பேபி ஆயிலை சருமத்தில் அப்ளை செய்து ஷேவ் செய்கிற பொழுது, வழக்கமாக ஷேவ் செய்யும்போது ஏற்படுகிற எரிச்சல், கீறல்கள் ஆகிய எதுவும் உண்டாகாது. அதேபோல் ஷேவிங் மெஷினில் உள்ள பிளேடும் சொரசொரப்பு தன்மை இல்லாமல் மிருதுவாக மாறிவிடும். ஒரு சில துளிகள் இருந்தாலே போதும் மென்மையான ஷேவை பெறலாம்.

shaving cream,baby oil,hair conditioner,honey,aloevera ,ஷேவிங் கிரீம்,பேபி ஆயில்,ஹேர் கண்டிஷ்னர்,தேன்,கற்றாழை

ஹேர் கண்டிஷ்னர்
ஷேவிங் க்ரீம் இல்லாமல் ஷேவ் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அடுத்த பெஸ்ட் சாய்ஸ் நீங்கள் தினமும் தலைக்கு பயன்படுத்துகிற ஹேர் கண்டிஷ்னர் பயன்படுத்தினாலே போதுமானது. இதில் சருமத்தை பாதுகாக்கிற பல உட்பொருள்கள் உள்ளதால் இது உங்களுடைய சருமத்துக்கு நன்மைகளை தரும். சருமத்தை வறட்சி இல்லாமல் நீரோட்டமாக வைத்திருக்கும். மேலும் இது சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்கும்.

பழைய சோப்புகள்
நம்முடைய வீட்டில் பன்படுத்தி விட்டு சிறிய அளவானதும் சோப்பை தூக்கி விசிவிடுவோம். அந்த சோப்பை ஒரு டப்பாவில் போட்டு ஷேவ் செய்ய பயன்படுத்துங்கள். சருமமும் மிருதுவாகும். ஷேவ் செய்யும் போது சருமங்களில் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் முடியும்.

shaving cream,baby oil,hair conditioner,honey,aloevera ,ஷேவிங் கிரீம்,பேபி ஆயில்,ஹேர் கண்டிஷ்னர்,தேன்,கற்றாழை

தேன்
தேனை சில துளிகள் சருமத்தில் தடவி, பின் ஸ்மூத்தாக ஷேவ் செய்ய முடியும். இதைத் தெரியாமல் தான் இவ்வளவு நாள் அவதிப்பட்டிருப்பீர்கள். தேன் ஒரு சருமம் மாய்ச்சரைஸ் ஆகும். நல்ல பொலிவும் உண்டாகும். தேன் ரொம்ப திக்காக பிசுபிசுப்பாக இருப்பதாக உணர்ந்தால் அதில் சிறிது தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள். ஷேவ் செய்த பின் ரேஷரையும் பிளேடையும் நன்கு சுத்தம் செய்து விட்டு வையுங்கள்.

கற்றாழை
மேலே சொன்ன எல்லா விஷயத்தையும் விட எந்தவித செலவும் இல்லாத அதேசமயம் ஆரோக்கியமான இயற்கையான ஷேவிங் க்ரீம் எது தெரியுமா? கற்றாழை தான். கற்றாழை ஜெல்லை ஷேவிங் க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்துவது இன்னும் ஆரோக்கியமானது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.

Tags :
|