Advertisement

கோடையில் தலை முடியை அலசுவது எப்படி?

By: Monisha Wed, 20 May 2020 5:44:38 PM

கோடையில் தலை முடியை அலசுவது எப்படி?

1)முதலில் தலைக்கு குளிப்புதற்கு முன்பு சீப்பு கொண்டு, முடியை சிக்கில்லாமல் நன்கு சீவிய பிறகு தான் முடியை நனைக்க வேண்டும்.

2)தேவையான அளவு ஷாம்புவை கையில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது நீர் ஊற்றி கலந்து, பின்னர் தான் தலையில் தடவி, விரல்களை கொண்டு தேய்க்க வேண்டும்.

3)அடுத்ததாக, விரல்களால் ஸ்கால்ப்பில் மெதுவாக மசாஜ் செய்யவும். நுரை அதிகம் வேண்டுமென்றால் சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஷாம்புவை கூந்தல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும்.

4)வேறு ஏதேனும் சிறந்த சுத்திகரிப்பான் அல்லது எண்ணெய் இருந்தால் அதற்கும் இதே முறையில் தொடர்ந்து செய்யவும்.

summer,hair fall,shampoo,conditioner ,கோடைகாலம்,தலை முடி,கண்டிஷ்னர்,தலை முடியை அலசுவது எப்படி?

5)இப்போது தலையை நீர் ஊற்றி நன்கு அலசிடவும். அடுத்ததாக, 20 கிராம் அளவிற்கு கண்டிஷ்னர் எடுத்து கூந்தலில் தேய்க்கவும். கண்டிஷ்னர் தடவும் போது ஸ்கால்ப்பில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

6)கூந்தல் முழுவதிலும் கண்டிஷ்னர் நன்கு தடவியப் பிறகு, 5 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

7)பின்னர், தண்ணீர் கொண்டு முடியை அலசிட வேண்டும்.

8)இறுதியில் மிருதுவான துண்டு கொண்டு கூந்தலில் இருந்து ஈரத்தை உலர்த்த பயன்படுத்துவதே சிறந்தது.

Tags :
|