Advertisement

எளிதான மேக்கப்பில் தேவதையாக ஜொலிப்பது எப்படி?

By: Monisha Fri, 09 Oct 2020 4:22:38 PM

எளிதான மேக்கப்பில் தேவதையாக ஜொலிப்பது எப்படி?

பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் ஒரு கலை என்றால் முகத்திற்கு சரியான மேக்அப் போட்டு தேவதை போல் ஜொலிப்பது ஒரு அபூர்வ கலை. பலரும் இதை சரியாக செய்வதால் தேவதையாக ஜொலிக்கிறார்கள். இந்த கலையை பெண்கள் அனைவரும் எளிதில் செய்து தேவதையாக ஜொலிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேக்அப் செய்வதற்கு முன்னால் உங்களை தயார்படுத்துதல் மிகவும் முக்கியம். மேக்அப் போடுவதற்கு முன்னால் முதலில் உங்கள் முகத்தை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். சருமத்தை கிரீம் உபயோகித்து ஈரப்பதமாக வேண்டும்.

மேக் அப் செய்ய நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை வாங்கும் பொழுது நீங்கள் கவனமாக உங்கள் சருமத்திற்கு பொருந்தும் வகையில் பார்த்து வாங்க வேண்டும்.உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் தண்ணீர் சார்ந்த தயாரிப்புகள் சரியாக இருக்கும். உங்களுக்கு உலர்ந்த சருமமாக இருந்தால் எண்ணெய் சார்ந்த தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

makeup,beauty,face,skin,fairy ,மேக்கப்,அழகு,முகம்,சருமம்,தேவதை

ப்ரைமர்
எந்தவொரு ஒப்பனை தோற்றத்திற்கும் முதல்படி ப்ரைமரை பயன்படுத்துவது. இப்படி செய்வது உங்கள் முகத்தை மென்மையாக்கும். முகத்தில் உள்ள சிறிய துளைகளை அடைக்கும். நீங்கள் போடும் மேக் அப்பின் ஆயுளை அதிகரிக்கும். நீண்ட நேரம் நீங்கள் போடும் மேக் அப் அப்படியே இருக்கும்.

பவுண்டேஷன்
உங்கள் சருமத்திற்கு பொருந்தக்கூடிய பவுண்டேஷன் தேர்ந்தெடுத்து பவுண்டேஷன் பிரஷ் அல்லது டேம்ப் பியூட்டி ப்ளெண்டர் கொண்டு உங்கள் தோலில் நன்றாக தடவுங்கள். உங்கள் முகம், தாடை மற்றும் கழுத்து பகுதிகளில் முழுவதுமாக ஒரே அளவில் இருக்கும் படி நன்றாக தடவுங்கள். இது முகத்தில் இருக்கும் புள்ளிகள், திட்டுக்கள் போன்றவற்றை மறைக்கும்.

கன்சீலர்
கன்சீலர் பயன்படுத்துவது முக்கியமாக நல்ல கருப்பாக இருக்கும் இடத்தை மறைப்பதற்கு. கண்ணின் கீழ் இருக்கும் கருப்பு கருவளையத்தை கன்சீலர் தடவுவதன் மூலம் கருவளையம் மறையும். அதுபோல முகத்தில் காணப்படும் கருமையான திட்டுக்களில் இந்த கன்சீலர் பயன்படுத்தி கருமையை குறையுங்கள். இதனால் சருமத்தின் கலர் ஒரே சீராக இருக்கும்.

makeup,beauty,face,skin,fairy ,மேக்கப்,அழகு,முகம்,சருமம்,தேவதை

கண்களை அழகுபடுத்த
கண் இமைகளை அழகுபடுத்தும் ஐலைனர் நல்ல உயர்தரமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏனென்றால் கண்களின் பாதுகாப்பு மிக முக்கியம். ஐலைனரைப் பயன்படுத்தி, உங்கள் கண்களின் மேல் வாட்டர்லைன் மற்றும் கீழ் லேஷ்லைனின் வெளிப்புற மூலைகளை வரைந்துகொள்ளுங்கள். கண்கள் மேலும் பிரகாசமாக தோற்றமளிக்க ஒரு மஸ்காரா கோட் தடவுங்கள்.

கண் புருவங்கள்
உங்கள் கண் புருவங்களை அழகுபடுத்துவது முகத்திற்கு இன்னும் அழகை கொடுக்கும். உங்களுக்கு இயற்கையாகவே நல்ல அடர்த்தியான, கருமையான புருவங்கள் இருந்தால் பரவாயில்லை. புருவம் ஒழுங்கற்று அல்லது அடர்த்தியாக இல்லாமல் இருந்தால் அதை பெஞ்சில் கொண்டு நன்றாக அழுத்தமாக வரைந்து கொள்ளுங்கள். கண் புருவங்களுக்கு பயன்படுத்தும் பென்சில்கள் உங்கள் புருவங்களுடன் மிக நெருக்கமாக பொருந்தக்கூடிய பென்சில் மற்றும் தயாரிப்புகளை தேர்வு செய்யுங்கள்.

லிப்ஸ்டிக்
உங்கள் மேக் அப்பை அதிகமாக எடுத்து காட்டுவது உதடுகள். உதடுகளில் நீங்கள் பயன்படுத்தும் லிப் ஸ்டிக் உங்கள் மேக் அப்பின் அழகை சிதைக்காத வண்ணம் இருக்க வேண்டும். உங்கள் உதடுகளில் லிப் ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்னால் உதட்டை லிப் பாம் கொண்டு துடைத்து கொள்ளுங்கள் இதனால் உங்கள் உதடு ஈரப்பதமாக இருக்கும். அடுத்து உங்கள் தோல் கலரை ஒத்த லிப் வண்ணங்களைத் தேர்வு செய்யுங்கள். சரியான உதட்டுச்சாயம் பயன்படுத்தினால் மட்டுமே அது அழகை மேலும் எடுத்து காட்டும். இல்லையென்றால் அசிங்கமாகிவிடும். இந்த விஷயங்களை நீங்கள் சரியாக செய்து முடிக்கும் பொழுது ஒரு அழகு தேவதையாக ஜொலிப்பீர்கள்.

Tags :
|
|
|
|