Advertisement

வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண வேண்டுமா?

By: Monisha Wed, 19 Aug 2020 5:28:08 PM

வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண வேண்டுமா?

வறண்ட சருமத்துக்கு மருந்தாக ஆவாரம் பூ விளங்குகிறது. இதை சருமத்தில் பயன்படுத்த ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

அருகம் புல்லை பயன்படுத்தியும் வறண்ட சருமத்தை சரி செய்யலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, தயிர். 100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய நெல்லிக்காய் அளவுக்கு கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவந்தால் வறண்ட சருமம் மாறும். தோல் பொலிவு பெறும். உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும். தோல் மென்மையாகும்.

dry skin,face,beauty,skin health ,வறண்ட சருமம்,முகம்,அழகு,தோல் ஆரோக்கியம்

ஆவாரம் மொட்டு, இலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். தினமும் இவ்வாறு செய்வதால் தோலில் எண்ணெய் பசை வர ஆரம்பிக்கும். தோல் மென்மையாகும்.

ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து மேல் பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல் பளபளப்பாகும். தோல் ஆரோக்கியத்தை அடையும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல், ஆவாரம்பூ போன்றவற்றை பயன்படுத்தி இல்லத்தில் இருந்தவாறே வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.

Tags :
|
|