Advertisement

சரும நிற மாற்ற பிரச்னையை இயற்கையான பொருட்களைக் கொண்டு எவ்வாறு சரி செய்யலாம்!

By: Monisha Sat, 04 July 2020 12:01:41 PM

சரும நிற மாற்ற பிரச்னையை இயற்கையான பொருட்களைக் கொண்டு எவ்வாறு சரி செய்யலாம்!

கோடைக்காலத்தில் சாதாரணமாக காணப்படும் பிரச்சனை தான் சன்டான் எனப்படும் சரும நிற மாற்றம். எனினும், கோடைக்காலத்தில் மட்டும் தான் சருமத்தின் நிறம் மாறுபடும் என்று சொல்ல முடியாது. மழைக்காலத்திலும் கூட இந்த மாற்றங்கள் வரலாம்.

நம்மில் பலரும் இந்த சரும நிற மாற்றங்களை சரி செய்யும் நோக்கில் விலை அதிகமான இரசாயனம் கலந்த க்ரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இப்படி விலை அதிகமான காஸ்மெடிக் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயெ செய்யப்பட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு சரும நிற மாற்றத்தினை போக்க முடியும்!

எலுமிச்சை ஃபேஸ் பேக்: எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து தயார் செய்து பூசும் கலவை முகத்தில் அற்புதங்களை செய்யும். எலுமிச்சை சாறு சரும கருமையை ஆற்றவும், வெள்ளரி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை குளுமைப்படுத்தவும் உதவுகின்றன.

skin color change,summer,natural,lemon,turmeric powder ,சரும நிற மாற்றம்,கோடைக்காலம்,இயற்கை,எலுமிச்சை,மஞ்சள் பொடி

பால் மாஸ்க்: காய்ச்சாத பால், புளி மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்த கலவையை முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி விட்டு, காய வையுங்கள். சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.

கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்: கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.

இளநீர்: இளநீரை தொடர்ந்து கைகள் மற்றும் முகத்தில் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை மிகவும் நேர்த்தியாக சரிசெய்ய முடியும். அது மட்டுமல்லாமல், சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் பராமரிக்க உதவும்.

மஞ்சள் பொடி: மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை சாற்றை வாரத்திற்கு மூன்று முறை தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தின் நிறத்தை வெளுக்கச் செய்யும்.

Tags :
|
|