Advertisement

மருக்கள் பிரச்சனையா..? வீட்டிலேயே மருக்களைப் போக்க இதோ இருக்கு வழி!

By: Monisha Tue, 16 June 2020 12:08:44 PM

மருக்கள் பிரச்சனையா..? வீட்டிலேயே மருக்களைப் போக்க இதோ இருக்கு வழி!

இன்றய காலகட்டத்தில் பலர் மருக்கள் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். மருக்கள் பொதுவாக முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றது. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. எனவே மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே மருக்களைப் போக்க வேண்டுமா? இதோ இருக்கு வழி!

இஞ்சி
ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

beauty,warts,ginger,onion,garlic ,அழகு,மருக்கள்,இஞ்சி,வெங்காயம்,பூண்டு

வெங்காயம்
வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.

beauty,warts,ginger,onion,garlic ,அழகு,மருக்கள்,இஞ்சி,வெங்காயம்,பூண்டு

பூண்டு
பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்க வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் ஏற்கனவே இருக்கும் மருக்கள் மறைவதோடு, புதிதாக மருக்கள் ஏற்படாமல் தடுக்கும்.

Tags :
|
|
|
|