Advertisement

சரும பராமரிப்பில் டார்க் சாக்லேட்டை சேர்த்துக் கொள்வது எப்படி?

By: Monisha Mon, 21 Sept 2020 12:06:20 PM

சரும பராமரிப்பில் டார்க் சாக்லேட்டை சேர்த்துக் கொள்வது எப்படி?

சாக்லேட்கள் ஒருவருக்கு நல்ல பரிசாகவும், புதுணர்ச்சி தரும் பொருளாகவும், பாலுணர்வை ஊட்டும் சிறந்த பொருளாகவும் விளங்குகிறது. இது ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் கொண்டதால், வயதான தோற்றத்தை அடைவதிலிருந்து தடுக்க உதவும். இது சருமத்தில் கொலாஜென்களை அதிக படுத்தி, முகத்தில் பொலிவை தருகிறது. இப்படிபட்ட சாக்லேடை உங்கள் சரும பராமரிப்பில் எப்படி சேர்த்துக் கொள்வது என்பதைப் பார்க்கலாம்.

சாக்லேட் ஃபேஷியல்
இந்த ஃபேஷியலை நீங்கள் சாப்பிடக்கூட செய்யலாம். சாக்லேட் ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான சருமத்தை அளித்து முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது. உருக்கிய டார்க் சாக்லேட்டை ஒரு மேசைக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி பன்னீர் ரோஸையும் தேனையும் இத்துடன் சேர்த்து பேஸ்ட்டு செய்யவும். முகத்தை கிளென்ஸ் மற்றும் டோன் செய்தவுடன் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். பதினைந்து நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும். அதன் பின்னர் மாயிஸ்டரைஸ் செய்யவும்.

skin,dark chocolate,facial,beauty,freshness ,சருமம்,டார்க் சாக்லேட்,ஃபேஷியல்,அழகு,புதுணர்ச்சி

சாக்லேட் காப்பி ஸ்கிரப்
காப்பி ஸ்கரபிற்கு இறந்த சருமத்தூள்களை அகற்றி சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்ககூடியது. கொக்கோவிற்கு சருமத்தில் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்ககூடிய தன்மைக் கொண்டது. 3 தேக்கரண்டி டார்க் சாக்லேட், ஒரு கப் சர்க்கரை, 2 தேக்கரண்டி அரைத்த காப்பி மற்றும் அரை கப் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இவற்ரை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலக்கவும். கலந்த கலவையை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கலாம். தேவைப்படும் போதெல்லம் இதை மைக்க்ரோவாவ் அவெனில் சூடு செய்து உபயோகிக்கலாம்.

சாக்லேட் ஹேர் ஸ்மூதி
மீடியம் அளவு டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளவும் . இதை டபிள் பாயிலரில் உருக்கவும். அரை கப் தயிர் மற்றும் தேனைக் கலக்கவும். உங்கள் சிகையில் இதை தடவவும். 20 நிமிடங்கள் கடந்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவவும். இதன் பின்னர் ஷாம்பூ மற்றும் கண்டிஷன் செய்தால் கூந்தல் பளபளப்பாக மாறிவிடும்.

Tags :
|
|
|