Advertisement

ஆளி விதையை முடி வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?

By: Monisha Wed, 25 Nov 2020 12:22:05 PM

ஆளி விதையை முடி வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?

ஆளி விதை சருமத்திற்கும், முடிக்கும் ஏராளமான நன்மைகளை தருகின்றது. ஆளி விதையை முடி வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

ஆளி விதை எண்ணெயை எடுத்து உங்கள் முடிக்கு மசாஜ் செய்து வரலாம். கூந்தல் முழுவதுமாக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தவுடன் 20 நிமிடம் கழித்து முடியை ஆலசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முடி நன்கு அடர்த்தியாக வளர செய்யும்.

ஆளிவிதை ஜெல்
தேவையான பொருட்கள்: ஆளி விதை எண்ணெய் - 1/4 கப், நீர் - 2 கப், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆளி விதை எண்ணெய்யும், தண்ணீரையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்பு அது கெட்டியாகும் வரை சூடாக்கி, இறுதியில் எலுமிச்சை சாற்றை அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும். கெட்டியாகும் இந்த ஜெல்லை எடுத்து ஆறவைத்து உங்கள் முடிக்கு தடவலாம்.

flaxseed,beauty,hair,growth,oil ,ஆளி விதை,அழகு,முடி,வளர்ச்சி,எண்ணெய்

பயன்படுத்தும் முறை: இதை தினமும் தூங்கும் முன்பு உங்கள் கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது குறைந்து, முடி நன்கு வளர்ச்சி அடையும். முடி உடைதல் தடுக்கப்படும்.

ஆளி விதையை நன்கு காயவைத்து அதை அரைத்து கொள்ளுங்கள். பின்பு இதை தயிருடன் கலந்து ஹேர் பேக் போல முடியின் வேர்க்கால்கள் வரை அப்ளை செய்யுங்கள். கூந்தல் முழுவதுமாக தடவி விட்டு, ஒரு அரை மணி நேரம் கழித்து முடியை அலசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு இருமுறை செய்தால் முடி பளபளவென இருக்கும், முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

Tags :
|
|
|