Advertisement

உடல் நலத்தில் பாதிப்பு இருந்தால் முதலில் பிரதிபலிப்பது கூந்தலில்தான்!!!

By: Nagaraj Tue, 11 Oct 2022 10:51:12 AM

உடல் நலத்தில் பாதிப்பு இருந்தால் முதலில் பிரதிபலிப்பது கூந்தலில்தான்!!!

சென்னை: முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, முடி பிளவு போன்ற பிரச்சனைகள் இப்போது பொதுவானதாக இருந்தாலும், கூந்தல், உங்களது உடல்நிலையை பற்றி சொல்கிறது என உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தலைமுடி சில உடல்நலப் பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு காட்டி கொடுக்கும்.


உலர்ந்த, உடையக்கூடிய முடி: ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இது ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம்,, ஹார்மோன் மாற்றங்கள், புரதக் குறைபாடுகள், வைட்டமின் ஏ மற்றும் ஜின்க் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் குறைபாட்டாலும் இவை ஏற்படலாம்.


முடி உதிர்தல்: அளவுக்கு அதிகமான முடி உதிர்தல் PCOS க்கான (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) அறிகுறியாக இருக்கலாம். இது தவிர புரதச்சத்து குறைபாடு, மன அழுத்தம் அல்லது தைராய்டு பிரச்சனை, இரத்த சோகை போன்றவைகளாலும் ஏற்படலாம்.

health,hair,body,affect,reflect ,ஆரோக்கியம், கூந்தல், உடல், பாதிப்பு, பிரதிபலிக்கும்

நுனி முடி பிளவுகள்: நுனி முடி பிளவுகள் , உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை காட்டுகிறது. இதனால் முடி வறண்டு மற்றும் உடையக்கூடியதாக இருக்கும். மேலும் வைட்டமின் B6, மெக்னீசியம் மற்றும் ஜின்க் குறைபாடுகளும் நுனி முடி பிளவுகளை ஏற்படுத்தும்.

இளநரை: மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள், ஃபோலிக் அமிலத்தின் குறைபாடுகள், வைட்டமின்களின் குறைபாடுகளினால் தான் இளநரை ஏற்படுகிறது. புகைபிடித்தல் அல்லது மரபணுக்கள் கூட காரணமாக இருக்கலாம்.

எண்ணெய் பசை நிறைந்த முடி: இவை முக்கியமாக ஜின்க், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 ஆகியவற்றின் குறைபாடுகளால் ஏற்படுகின்றன.


உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அது முதலில் பிரதிபலிக்கும் இடங்களில், தலைமுடியும் ஒன்று. எனவே, முடியின் ஆரோக்கியத்தை வைத்து உங்கள் உடலின் ஆரோக்கியத்தை கூறலாம். அதனால் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கவனித்து, ஏதேனும் தவறு இருந்தால், விரைவில் உங்கள் ட்ரைக்காலஜிஸ்ட்டை அணுகவும்.

Tags :
|
|
|
|