Advertisement

தங்கம் போன்று மேனி பளபளக்கும் உடலை பெற வேண்டுமா ...கேரட் சாப்பிடலாம்

By: vaithegi Tue, 16 Aug 2022 9:58:50 PM

தங்கம் போன்று மேனி பளபளக்கும் உடலை பெற வேண்டுமா ...கேரட் சாப்பிடலாம்

நீங்கள் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டுமா அதற்கு கேரட் சாப்பிடுவதே வழி.கேரட்டில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. கோடைக்காலங்களில் வெளியே செல்லும்போது அதிகமான வெயில் கண்களையும், தோலையும் பாதிக்காமல் தடுக்க தினமும் கேரட்டை தோலை சீவி சாப்பிடலாம்.மேலும் தங்கத்தை அணிவதால் உடலுக்கு அழகு கிடைக்கும் அது போல கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுவது முக்கியம்.



மேலும் சீவிய தோலை அரைத்து உடலில் தடவினால் வெயிலால் ஏற்படும் வேர்குரு, சிவப்பு தன்மை நீங்கும்.தினம் பணிகளுக்கு சென்றுவிட்டு சோர்வாக இருந்தாலும் அல்லது வீட்டுவேலைகளை முடித்து சோர்வாக இருந்தாலோ கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடல் சோர்வு உடனடியாக நீங்கும்.கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

carrot,body ,கேரட்,உடல்

அது போல நாள்பட்ட வயிற்று புண் குணமாக கேரட் துருவலுடன் உப்பில்லாத தயிர் சேர்த்து தினமும் காலை சாப்பிடலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், வயிற்று புண்ணையும் விரைவில் ஆற்றும்.தினமும் காலையில் கேரட்டை நறுக்கி சிறிது உப்பு தூவி சாலட் போல செய்து சாப்பிடலாம். கேரட் ரத்தத்ததை சுத்தப்படுத்தும்.தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வருவதால் தோல் சுருக்கங்கள் மெல்ல நீங்கி உடல் பொலிவு பெறும்.மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.


சில சமயம் காலை நேரங்களில் சர்க்கரை சேர்க்காமல் அரை ட்ம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் வயிற்று புழுக்கள் வெளியேறி, வயிறு சுத்தமாகும்.தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. மேலும் குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். எனவே கேரட் உண்டு நலன் பெறுவோம்.



Tags :
|