Advertisement

40 வயதில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்கள்!!

By: Monisha Thu, 17 Sept 2020 5:09:55 PM

40 வயதில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்கள்!!

உங்கள் 40 வயதில் சரும செல்கள் புதுப்பிக்கப்படும் விகிதம் 20 வயதை விட பாதியாகிவிடும். இதனால் உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றத்துவங்கி, உங்கள் சருமம் குறைந்த பொலிவுடன் காட்சி அளிக்கத் துவங்கலாம். எனவே தான், உங்கள் சருமத்தை நீர்த்தன்மை பெற வைத்து, அதை ஊட்டச்சத்து பெற வைக்கும் சரும நல முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும், நல்ல தூக்கத்தை பெறுவதும், மன அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவதும் அவசியம். 40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!

சன்ஸ்கிரீன்
உங்களுக்கு வயதாகும் போது, உங்கள் சருமத்தின் மீதான சூரிய ஒளியின் தாக்கமும் அதிகமாகிறது. இதன் விளைவாக, நீங்கள் எப்போதும் எச்.பி.எப் பாதுகாப்பு கொண்டிருப்பது அவசியமாகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்கும் சூழலில் தொப்பி அணிவதை வழக்கமாக கொள்ளவும்

டே கிரீம்
பகல் நேரத்தில், உங்கள் சன் ஸ்கிரீனால் தடுக்க முடியாத பிரிரேடிலக்ஸால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பது மிகவும் முக்கியமாகும். டே கிரீம் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சி பெற வைத்து, ஈரப்பதம் அளித்து, அதை அழகு பெற வைத்து, பொலிவை அளிக்கிறது.

skin cells,sunscreen,day cream,night cream,beauty ,சரும செல்கள்,சன்ஸ்கிரீன்,டே கிரீம்,நைட் கிரீம்,அழகு

நைட் கிரீம்
வயோதிகத்திற்கு எதிரான தன்மை கொண்ட நைட் கிரீமை தேர்வு செய்வது அவசியம். இத்தகைய கிரீம்கள் சரும செல்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு, சருமத்தின் வயோதிக தன்மையை தாமதமாக்குகிறது.

எக்ஸ்போலியேட்டர்
உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது, இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை மேலெழச்செய்யும். இதன் மூலம் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவு மிக்கதாகவும் இருக்கும்.

ஐ கிரீம்
ஐகிரீம்கள் என்று வரும்போது, அதிலும் நீங்கள் 40 களில் இருக்கும்போது, நுண்கோடுகள், சுருக்கங்கள், கரு வளையங்கள் போன்ற வயோதிக அம்சங்களை குறி வைக்கும். இந்த நேரங்களில் ஐ கிரீமை நாடுவது ஏற்றது.

Tags :