Advertisement

குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம்

By: Nagaraj Sat, 17 June 2023 11:28:40 PM

குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம்

சென்னை: குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். அதற்காக சில டிப்ஸ்கள் உங்களுக்காக.

கூந்தல் பராமரிப்பு: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம்.

bathing,creams,must,protection,skin,winter, ,அவசியம், கிரீம்கள், குளிக்க செல்லுதல், குளிர்காலம், சருமம், பாதுகாப்பு

இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.

அதே போல், மூலிகைச் சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது. அடிக்கடி ஹேர் கலரிங் செய்வது, சுருட்டை முடிகளை நீண்ட முடியாக மாற்றும் ஸ்ட்ரீக்கிங் ஆகியவற்றால் கூந்தலின் ஈரப்பதம் வறண்டு போவதால் அவற்றையும், சூடான சாதனங்களை கூந்தலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.

Tags :
|
|
|
|