Advertisement

தலைமுடி கருகருன்னு அசுர வேகத்தில் வளர இந்த ஹேர் பேக்கா போட்டாலே போதும்

By: vaithegi Fri, 01 Sept 2023 5:21:05 PM

தலைமுடி கருகருன்னு அசுர வேகத்தில் வளர இந்த ஹேர் பேக்கா போட்டாலே போதும்

முடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க செம்பருத்தி இலை ஹேர் பேக் ... செம்பருத்தி இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.மேலும் இது நம் உடம்பில் உள்ள கொலஜின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இந்த கொலாஜின் உற்பத்தியானது நம்முடைய சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்கி பளபளப்பாக மாறுவதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இது தலை முடி தொடர்பான பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக உள்ளது.

நம் உடலில் கொலாஜின் அதிகரிக்கும் போது முடி வேர்க்காலில் இருந்து வரும் போதே நல்ல ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும். மேலும் அது மட்டும் இன்றி தலையில் உள்ள இன்ஃபெக்சன் அதாவது பொடுகு, சிலருக்கு வெள்ளை நிறத்தில் செதில் செதிலாக உதிர்ந்து வரும் இது போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் முற்றிலும் ஆக தடுக்கக் கூடிய ஒன்றாக செம்பருத்தி இலை உள்ளது. இந்த இலையை வைத்து தான் இப்போது இந்த ஹேர் பேக் தயாரிக்க போகிறோம்.

hair bag,hair ,ஹேர் பேக்,தலைமுடி

இந்த செம்பருத்தி இலையை உங்கள் முடியும் அளவிற்கு ஏற்றார் போல் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கறிவேப்பிலை இலையும் எடுக்க வேண்டும். செம்பருத்தி இலை ஒரு மடங்கு எடுத்தீர்கள் என்றால் அதை விட பாதி அளவு கருவேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அளவுகளில் எடுத்த இலைகளை தண்ணீரில் ஒரு முறை சுத்தமாக அலசிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படி அரைத்து எடுத்த இந்த பேஸ்ட்டை உங்கள் முடியின் வேர்க்கால்கள் முதற் கொண்டு முடியும் நுனிவரை நன்றாக தேய்த்து 45 நிமிடங்கள் வரை அப்படியே தலையில் இருக்க வேண்டும். இது இவ்வளவு நேரம் தலைங இருப்பதால் எந்த ஒரு தொந்தரவையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்து விடுங்கள். இந்த பேக்கை போட்டு குளிக்கும் போது எந்த காரணத்தை கொண்டும் கெமிக்கல் கலந்த எந்த ஷாம்பையும் பயன்படுத்தக் கூடாது.

இதை வாரம் 1 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும். முடி உதிர்வு, இளநரை, முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் நீண்டு வளரும். இயற்கையான முறையில் இந்த ஹேர் பேக்கை தயாரித்து பயன்படுத்தும் பொழுது நல்ல முறையில் நம் முடி வளர்ச்சி அதிகரித்து கொள்ளலாம்.

Tags :