Advertisement

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்!

By: Monisha Sun, 01 Nov 2020 4:13:20 PM

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்!

சருமத்தை எவ்வளவு தான் பத்திரமாக பாதுகாத்தாலும் பல பிரச்சனைகள் நம்மை தாக்கி கொண்டே தான் இருக்கும். எனவே குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க நாம் செய்ய வேண்டியவைகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓய்வாக இருக்கும் போது முகத்தை இதமான நீரில் கழுவி துடைத்து கற்றாழை சாறை தடவி மசாஜ் செய்யலாம். கற்றாழையில் இருக்கும் வைட்டமின், பீட்ட கரோட்டின் போன்றவை குளிர்காலத்தில் சருமத்தில் உண்டாகும் வறட்சியை நீக்கி முகத்துக்கு தனி மினுமினுப்பை கொடுக்கும். சரும வறட்சியும், சருமத்தில் இருக்குன் வெள்ளை திட்டுகளும் மறையும்.

சருமத்தின் வறட்சியை தடுக்க மாய்ஸ்சுரைஸர் உதவும். மாய்ஸ்சுரைஸர் உபயோகப்படுத்தும் முன்பு குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சுரைஸர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் சருமத்தை ஈரம் போக துடைத்து உலர விட்டு மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்துங்கள்.

winter,skin,beauty,cactus,coconut oil ,குளிர்காலம்,சருமம்,அழகு,கற்றாழை,தேங்காய் எண்ணெய்

குளிர்காலத்தில் ஃபேஸ் பேக் போட சிறந்த சாய்ஸ் பழங்கள் தான். எளிமையாக கிடைக்க கூடிய வாழைப்பழம் கூட உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து மீட்கும். தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களில் ஒன்றை மசித்து ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். இவை சருமத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும்.

தினமும் இரவு தூங்கும் போது தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயிலை உள்ளங்கையில் தேய்த்து முகம், கழுத்து, கை, கால் பகுதிகளுக்கு மசாஜ் செய்து தூங்குங்கள். காலை எழுந்ததும் குளிப்பதற்கு முன்பு அதே போன்று தேங்காய் எண்ணெய் தொட்டு முகம், கை, கால் பகுதிகளில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து குறிப்பாக உதடு மற்றும் உதடு சுற்றிய பகுதியில் மசாஜ் செய்து குளித்தால் நாள் முழுக்க பனியில் சுற்றினாலும் உங்கள் சருமம் பொலிவாக அழகாக இருக்கும்.

குளிர்காலத்தில் தண்ணீரை குடிப்பதே இல்லை என்பதுதான் சருமத்தின் அதிகப்படியான வறட்சிக்கு காரணம். தினமும் காலை எழும் போதே ஒரு தம்ளர் தண்ணீரோடு உங்கள் நாளை தொடங்குங்கள். உடலில் நீர்பற்றாக்குறை இல்லாமல் இருந்தாலே உங்கள் சருமத்தின் வறட்சியை மட்டும் அல்லாமல் முகப் பருக்கள் வராமலும் பாதுகாத்து கொள்ளலாம்.

Tags :
|
|
|
|