Advertisement

தேவையற்ற முடிவளர்ச்சியை அகற்றும் லேசர் முறை!

By: Monisha Tue, 22 Sept 2020 4:27:54 PM

தேவையற்ற முடிவளர்ச்சியை அகற்றும் லேசர் முறை!

அழகு உலகில் தற்போதைய மந்திரச் சொல் லேசர் ஆகும். இந்த லேசர் முறையில் தேவையற்ற முடிவளர்ச்சியை தடுக்கலாம்.

மாதந்தவறாமல் அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்களா? புருவங்களின் தேவை யற்ற முடியை பிடுங்கும்போது ஏற்படும் வலி, கை, கால் களில் சூடான மெழுகு படுவதால் ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லையா? அதிர்ஷ்டவசமாக, நவீன அறிவியலும் அழகு தொழில்நுட்பங்களும் அதற்கு மாற்றாக லேசரை கண்டறிந்துள்ளன. லேசர் சிகிச்சை எனப்படும் இம்முறை தோல் சிகிச்சைகளில் சாதாரணமாகி வருகிறது. தோலின் திசுக்கள் அந்த ஒளியை கிரகித்துக் கொள்ள, மற்ற திசுக்களை பாதிக்காமல் செல்களை மட்டும் லேசர் நீக்குகிறது.

முடிக்கற்றைகளை நீக்குவதற்கான க்ரீம், தேவையற்ற இடங்களில் வளரும் முடி, தேவையற்ற மென்முடிகளிடம் இருந்து விடைபெறுங்கள்! ஒவ்வொரு சிகிச்சைக்குப் பின்னும் முடி வேரின் எண்ணிக்கையும் அடர்த்தியும் குறையும். அதேநேரத்தில் முடியின் நிறமும் வெளிறும். இறுதியில், உங்களுடைய பொறுமை இனிமேல் சோதிக்கப்படாமல் இருக்க, லேசர் சிகிச்சை நிரந்தர தீர்வைத் தரும்.

beauty,laser,face,hormones,therapy ,அழகு,லேசர்,முகம்,ஹார்மோன்கள்,சிகிச்சை

ஏதோ ஓர் உந்துதலில் நீங்கள் பச்சைகுத்திக் கொண்ட டிசைனையும், அவலட்சணமான கறைகள், மச்சங்களையும், இளம்பருவத்தில் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும், தேவையற்ற முடியை நீக்கவும் லேசர் பயன்படுத்தப்படுகிறது. முடியை நீக்குவதற்கு 3 வகையான லேசர்கள் உள்ளன. அவை அலெக்ஸாண்ட்ரைட், டையோடு மற்றும் நீண்ட துடிப்புடைய என்.டி: யாக். முடியின் வேரை லேசர் கதிர்கள் அழிப்பதால், முடி வளர்வது தடுக்கப்படுகிறது.

பொதுவாக, எல்லா லேசர் சிகிச்சைகளையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு ஹார்மோன்கள் சமநிலையில் இல்லையென்றால், தேவைக்கேற்ப "டச்-அப்" செய்ய வேண்டியிருக்கும். அடர்ந்த, கறுத்த முடிகளில்தான் லேசர் நன்றாக வேலை செய்யும். கை, கால் போன்ற பரந்த இடங்களில் முடியை நீக்குவதற்கு யாக் லேசர் சிறந்தது. முகம், அக்குள் போன்ற இடங்களில் உள்ள முடியை நீக்குவதற்கு மற்ற லேசர் சிகிச்சைகள் சிறந்தவை.

Tags :
|
|
|