Advertisement

சரும அழகை பாதுகாக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sat, 11 June 2022 09:38:33 AM

சரும அழகை பாதுகாக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: அகத்தின் அழகைவிட சருமத்தின் அழகை வைத்துதான் பெரும்பாலானோரால் மற்றவர்கள் அணுகப்படுகிறார்கள். எனவே சருமத்தை அழகுப்படுத்த க்ரீம்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மூலமாகவே சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.

தக்காளி: சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் தக்காளியில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை சருமத்திற்கு தேவையான சத்துக்களையும், பளபளப்பையும் தரும்.

வால்நட்: ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், வைட்டமின் ஈ, செலினியம், புரதம் போன்ற சத்துக்கள் வால்நட்டில் நிரம்பியுள்ளன. இவை சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக மாறுகின்றன. அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு இது சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலோஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. மன அழுத்தத்தையும், அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தி சரும நலனை பேணுவதற்கு உதவுகின்றன.

skin,care,chocolates,helps,symptoms,heart ,சருமம், பாதுகாப்பு, சாக்லேட்டுகள், உதவுகின்றன, அறிகுறிகள், இதயம்

ஆலிவ் எண்ணெய் கருப்பு சாக்லேட்: சாக்லேட் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர வழி வகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை பொறுத்தவரை, டார்க் சாக்லேட் இதயத்திற்கும், சருமத்திற்கும் நலம் சேர்க்கக்கூடியது. அதில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன.

அவை பல வகையான நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கக் கூடியவை. மேலும் டார்க் சாக்லேட், பயோ ஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கு உகந்த உணவாக அமைகிறது.அதில் உள்ள பிளவோனால்கள் சூரிய கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதால் டார்க் சாக்லேட்கள் சரும பளபளப்புக்கு உதவுகின்றன.

Tags :
|
|
|