Advertisement

சருமத்திற்கு பொலிவை தரும் மஞ்சள் குறித்து தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Thu, 12 Jan 2023 11:51:50 PM

சருமத்திற்கு பொலிவை தரும் மஞ்சள் குறித்து தெரிந்து கொள்வோம்

சென்னை: மஞ்சள் சருமத்திற்கு பொலிவைத் தரும். நமது பாரம்பரிய உணவுகளிலும், அழகு சாதனப் பொருட்களிலும் மருத்துவ குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோ பொராசிசை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது. மஞ்சளை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சருமத்தைப் பராமரித்து வந்தால், சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி சருமம் விரைவில் சிவப்பழகு பெறுவதை உணரலாம். இப்படி சிவப்பழகு தரும். மஞ்சள் முகப் பூச்சுக்களை காண்போம்.

turmeric,paneer,sandalwood,curd,semen ,மஞ்சள், பன்னீர், சந்தனம், தயிர், சருமம்

மஞ்சள் மற்றும் தேன்: மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து கெட்டியான பேஸ்ட் போல் செய்து முகம் மட்டும் கழுத்தில் தடவி, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவினால் ,சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.

மஞ்சள் மற்றும் சந்தனம்: பருக்கள் நீங்கி சருமம் பளிச்சென்று தோற்றம் தர வேண்டுமெனில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தன பொடி ,ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்துக்கொண்டு அந்தக் கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் பன்னீர்: ஒரு ஸ்பூன் பன்னீரில் மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன் சிவப்பழகும் பெறும்.

Tags :
|
|