Advertisement

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Mon, 06 Feb 2023 10:15:16 AM

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

சென்னை: வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அல்ட்ரா வயலட் கதிர்கள் என்றால் மூன்று வகை உள்ளது. சூரிய கதிர்கள் ஏ,பி,சி(UVA,UVB,UVC) என வகைப்படும். ஏ மற்றும் பி கதிர்கள் அதிகளவில் சரும பிரச்சனைகளை ஏற்படுத்திடும். சரிவாங்க இந்த பிரச்சனை சரிசெய்வதற்கு வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரிக்கலாம்.

நீங்கள் அதிகளவில் வெயிலில் செல்பவராக இருந்தால் உங்களுக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். சூரிய கதிர்கள் அதிகளவில் சருமத்தில் படுவதால் தோலில் உள்ள மெலமனின் அதிகமாக உற்பத்தி செய்து அது தோலில் உள்ள நுண் குழாய்களைச் சேதப்படுத்தும். இதனால் தோல் சுருக்கம் மற்றும் புற்று நோய் வருவதற்குக் கூட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையை இயற்கை முறையில் சரிசெய்வதற்குப் பல வகையான பொருள்கள் உள்ளது.

glycerin,sun,sunlight,vulnerability,skin,rosewater,aloe ,கிளிசரின், வெயில், சூரிய ஒளி, பாதிப்பு, சருமம், ரோஸ்வாட்டர், கற்றாழை

பொதுவாக ஒரு சன்ஸ்கிரீனில் எஸ்பிஎஃப் 30 என்ற அளவை கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கைமுறையில் வீட்டிலேயே செய்வதால் அது இரட்டிப்பாக்கலாம்.

இயற்கையான பொருள்களில் பல மருத்துவ குணங்களைக் கொண்ட சந்தன மரம் ஒன்று. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், குங்குமப்பூ போன்ற பல வகை பொருள்களில் வைட்டமின் ஈ சத்துகள் அதிகளவில் உள்ளது. வீட்டில் தயார் செய்யும் போது துத்தநாக ஆக்ஸைடை மிக்ஸி, ஜாரில் அரைத்து கவனமாகக் கையாள வேண்டும்.

கிளிசரின் சிலதுளிகள் மற்றும் ரோஸ் வாட்டர், அத்துடன் கற்றாழை சாறு கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜ்ஜில் சேமித்து வைக்கவும். இதை வெயிலில் செல்லவதற்கு முன்பு பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவதால் சருமத்தை எளிதில் வெயிலிருந்து பாதுகாக்கலாம்.

கிளிசரின் என்பது சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு ஒரு நல்ல மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காயத்தைச் சரிசெய்யவும், தழும்புகள் வராமல் தடுக்கவும், காயம் மேலும் பெரிதாகாமல் தடுக்கும். கிளிசரின் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகள் மற்றும் பாடி வாஷ்களை பயன்படுத்துவது நல்லது.

Tags :
|
|