- வீடு›
- அழகு குறிப்புகள்›
- முடி வளர உதவும் சில உணவுகளை பற்றி அறிந்து கொள்வோம்
முடி வளர உதவும் சில உணவுகளை பற்றி அறிந்து கொள்வோம்
By: Nagaraj Mon, 31 Oct 2022 10:47:47 PM
சென்னை: இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை முடி கொட்டுதல் ஆகும். இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உஷ்ணம், மரபு போன்ற பலவித காரணங்கள் உண்டு. இதை சரி செய்ய என்ன செய்யலாம்.
இப்பொழுது நாம் முடி கொட்டுதலை தடுத்து முடி வளர உதவும் சில உணவுகளை பற்றி பார்ப்போம். புரதசத்து நிறைந்த உணவுகள்: ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு பபுரதச்சத்து மிக மிக முக்கியம். தினமும் தேவையான அளவு புரதச்சத்து உணவினை எடுத்து வந்தால் உங்களின் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் முட்டை, பால், இறைச்சி,கொட்டை வகைகள் ஆகும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்: முடியின் வளர்ச்சிக்கு மற்றும்
ஆரோக்கியமான உடலிற்கு இரும்புச்சத்து மிக மிக முக்கியம். தினமும் தேவையான
அளவு இரும்பு சத்து உணவினை எடுத்து வந்தால் உங்களின் முடி உதிர்வு குறைந்து
ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஏற்படும்.
இரும்புச்சத்து அதிகம்
நிறைந்த உணவுகள் முருங்கை கீரை, பேரிச்சம்பழம், மாதுளை, கொய்யாப்பழம்,
பாதாம், பீட்ரூட், ஈரல் போன்ற உணவுகள் ஆகும்.
கொழுப்புகள்: உடலில்
உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைத்து உடல் எடையினை குறைக்க முக்கியமாக அமைவது
ஒமேகா-3 கொழுப்புகள் ஆகும். இது உங்கள் முடி, சருமம் மற்றும் மூளை
வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது