Advertisement

வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் மணப்பெண்ணுக்கான மாம்பழ ஃபேஸ்பேக்

By: Nagaraj Fri, 11 Sept 2020 08:45:26 AM

வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் மணப்பெண்ணுக்கான மாம்பழ ஃபேஸ்பேக்

மணப் பெண் என்றால் ப்ரூட் ஃபேசியல், கோல்டன் பேசியல் எனப் பல வகையான பேசியல் வகைகளை பார்லர்கள் செய்ய வேண்டாம். இனி அந்த பேசியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

மாம்பழம்- தேவையான அளவு

நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்

வைட்டமின் ஈ காப்சியூல்- 2

mango,aloe vera,bridal,glitter ,மாம்பழம், நல்லெண்ணெய், மணமகள், பொலிவு

செய்முறை: மாம்பழத்தினை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் நல்லெண்ணெய், வைட்டமின் ஈ காப்சியூல் சேர்த்து மிக்சியில் நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.

இந்த மாம்பழ ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால் என அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் ஊறவிட்டு முகத்தைக் கழுவினால் போதும் பொலிவாக இருப்பீர்கள். மிகவும் எளிமையான அதே நேரம் இயற்கை முறையில் இதை நீங்கள் செய்வதால் முகம் பளிச் என்று இருக்கும்.

Tags :
|
|