Advertisement

சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மயோனைஸ்... பயன்படுத்துவது எப்படி?

By: Monisha Mon, 07 Dec 2020 12:34:05 PM

சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மயோனைஸ்... பயன்படுத்துவது எப்படி?

மயோனிஸ் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஒரு உயர் தர மூலப் பொருள் ஆகும். களங்கமில்லாத அழகான சருமத்தை பெற இந்த மயோனிஸ் பெரிதும் உதவுகிறது. மயோனைசில் உள்ள அதிக அளவு புரதம் , சரும ஆரோக்கியத்தை அதிகரித்து சரும அழகை மேம்படுத்துகிறது. சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் மயோனைஸ் சிறந்த தீர்வை தருகிறது. இது குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.

மயோனைஸ் மற்றும் ஓட்ஸ்
1 ஸ்பூன் வேகவைத்த ஓட்ஸ் மற்றும் 1 ஸ்பூன் மயோனைஸ் , இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.இந்த மாஸ்கை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி சருமம் பிரகாசிக்கும்.

மயோனைஸ் மற்றும் ஆரஞ்சு தோல்
1/2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடருடன் 2 ஸ்பூன் மயோனைஸ் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகத்தில் கருந்திட்டுக்கள் இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தலாம்.

skin,mayonnaise,beauty,almond oil,cactus ,சருமம்,மயோனைஸ்,அழகு,பாதாம் எண்ணெய்,கற்றாழை

மயோனைஸ் மற்றும் பாதாம் எண்ணெய்
1/2 ஸ்பூன் பாதம் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து மென்மையான க்ளென்சர் மூலம் வெந்நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தலாம். வறண்ட சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது.

மயோனைஸ் மற்றும் அரிசி மாவு
1 ஸ்பூன் அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் மயோனைஸ் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சூரிய ஒளியால் சருமத்திற்கு உண்டான கருமை மற்றும் பொலிவிழப்பை இந்த முறை சரி செய்கிறது.

மயோனைஸ் மற்றும் கற்றாழை
1 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும். இந்த மாஸ்கை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விடவும். பிறகு வெந்நீரால் முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால், முகத்திற்கு நீர்சத்து அதிகரிக்கிறது.

Tags :
|
|