Advertisement

சரும பிரச்னைகளை போக்கும் மருத்துவக்குணம் கொண்ட மஞ்சள்

By: Nagaraj Sat, 11 June 2022 7:01:51 PM

சரும பிரச்னைகளை போக்கும் மருத்துவக்குணம் கொண்ட மஞ்சள்

சென்னை: மஞ்சள் சரும பிரச்சனைகளைப் போக்கவும், முகத்தின் பொலிவு மேம்படவும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த மஞ்சளை தவறான முறையில் பயன்படுத்தினால், சரும பிரச்சனைகள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் என்பது தெரியுங்களா?
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-டானிங் பண்புகள் அதிகளவில் நிறைந்துள்ளன. ஆகவே இது முகப் பருக்கள், சரும கருமை, மற்றும் சரும சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். என்ன தான் மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக இருந்தாலும், அதைப் பயன்படுத்துவதில் செய்யும் தவறுகள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
எனவே மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்தும் போது ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். முகத்தை நன்கு கழுவவும் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்துபவர்கள் பலரும் முகத்தில் உள்ள மஞ்சளை நன்கு கழுவுவதில்லை. முகத்தில் ஆங்காங்கு மஞ்சள் இருக்கும். இப்படியே முகத்தில் மஞ்சளை விட்டுவிட்டால், பின் அது முகத்தில் எரிச்சல் மற்றும் அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

good effect,turmeric powder,face pack,skin,rosewater,products ,நல்ல பலன், மஞ்சள் தூள், பேஸ்பேக், சருமம், ரோஸ்வாட்டர், பொருட்கள்

முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தி முகத்தைக் கழுவிய பின்னர் மறக்காமல் முகத்தில் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். கொதிக்கும் வெயில் காலத்தில் குளிக்கும் போது கட்டாயம் பயன்படுத்த வேண்டியவை! சோப்பை தவிர்க்கவும் முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்திய பின்னர், பலரது முகத்தில் அதிக மஞ்சளை காணலாம். இந்த மஞ்சளை நீக்க பலரும் முகத்திற்கு சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் இப்படி செய்தால், முகச் சருமம் கருமையாக ஆரம்பிக்கும். எனவே இம்மாதிரியான தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். உங்களுக்கு எண்ணெய் சருமமா? அப்ப முகப்பரு ஏற்படாம தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
மஞ்சள் ஃபேஸ் பேக் முகத்திற்கு பொலிவை இயற்கையாக கொண்டு வருவதற்கு மஞ்சள் ஃபேஸ் பேக் உதவி புரியும். ஆனால் சில பெண்கள் மஞ்சளுடன் பலவிதமான பொருட்களைக் கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவார்கள்.

இப்படி செய்வதால் முகச் சருமம் தான் அதிக சேதமடையும். மஞ்சள் ஃபேஸ் பேக்கை போட விரும்புபவர்கள், மஞ்சள் தூளுடன், ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். இது நல்ல பலனைத் தரும்.

Tags :
|