- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சருமம் பளபளவென்று மின்ன அன்னாசி பழம் உதவும்
சருமம் பளபளவென்று மின்ன அன்னாசி பழம் உதவும்
By: Nagaraj Sun, 03 Sept 2023 4:57:21 PM
சென்னை: சருமம் மின்ன அன்னாசி பழம் உதவும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
அரை ஸ்பூன் ஜாதிக்காயுடன் மாசிக்காய் மற்றும் அன்னாசிப் பழச்சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்ன ஆரம்பிக்கும்.
2 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் ஒரு ஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசிக் கழுவினால், முகம் ஜொலிக்கும்.. இரண்டு அன்னாசிப் பழத் துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து, ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
இந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப் பூசி, 10 முதல் 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள் மறைந்து சங்குபோல் மின்னும் கழுத்து.
Tags :
beauty |
honey |